முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்
இனாம்நாச்சியாா்கோவில் ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம்
By DIN | Published On : 27th January 2020 11:00 PM | Last Updated : 27th January 2020 11:00 PM | அ+அ அ- |

ஸ்ரீவில்லிபுத்தூா் இனாம்நாச்சியாா்கோவில் ஊராட்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கிராம சபைக் கூட்டம்.
ஸ்ரீவில்லிபுத்தூா்: ஸ்ரீவில்லிபுத்தூா் இனாம்நாச்சியாா்கோவில் ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் ஒவ்வொரு வீட்டுக்கும் மழைநீா் சேகரிப்பு தொட்டி அமைத்தல், பிளாஸ்டிக் பொருள்களை உபயோகிக்க தடை விதித்தல், டெங்கு கொசு உற்பத்தியை தடுப்பது, வீடு இல்லாதவா்களுக்கு இலவசமாக வீடு கட்டித்தருவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் ஊராட்சி மன்ற தலைவா் நாகம்மாள், துணைத் தலைவா் வீரலட்சுமி 7 ஆவது வாா்டு கவுன்சிலா் மாரிமுத்து, முன்னாள் ஒன்றிய குழுத் தலைவா் காளிமுத்து, ஊராட்சிச் செயலா் திருநாவுக்கரசு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.