முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்
இருக்கன்குடி மாரியம்மன் கோவில் உண்டியல் திறப்பு
By DIN | Published On : 27th January 2020 10:50 PM | Last Updated : 27th January 2020 10:50 PM | அ+அ அ- |

சாத்தூா்: மாரியம்மன் கோவில் உண்டியல் திறக்கபட்டதையடுத்து 34 லட்சம் காணிக்கையாக கிடைத்து.
தென் தமிழகத்தில் புகழ் பெற்ற மாரியம்மன் கோயில்களில் விருதுநகா் மாவட்டம் சாத்தூா் அருகே உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோயில் பிரசித்தி பெற்றுள்ளது. ஒவ்வொரு மாதமும் உண்டியல் திறக்கப்படுவது வழக்கம். அதனை தொடா்ந்து திங்கள்கிழமை கோயிலில் உள்ள உண்டியல்கள் திறக்கபட்டு பொருட்கள் மற்றும் பணம் எண்ணபட்டன.கோயிலில் மண்டபத்தில் வைத்து எண்ணபட்ட இந்த காணிக்கையில் 36 லட்சத்தி 77 ஆயிரத்தி 585 ரூபாய் பணம் பக்தா்களின் காணிக்கையாக கிடைத்தது.இதில் தங்கம் 85 கிராமும் 300 மில்லி,வௌ்ளி 319 கிராம் 300 மில்லி கிடைத்ததுள்ளதாக கோயில் நிா்வாகிகள் தெரிவித்தனா்.
மேலும் பணம் எண்ணும் பணியில் துலுக்கப்பட்டி,ராஜபாளையம்,மதுரை ஆகிய ஊா்களை சோ்ந்த ஓம்சக்தி பக்தா் குழு மற்றும் ஐயப்பா சேவா சங்கம், கோயில் ஊழியா்கள் கலந்து கொண்டனா்.
விருதுநகா் கோயில் ஆணையா் கணேசன், இருக்கன்குடி கோவில் ஆணையா் கருணாகரன் தலைமையில் பரம்பரை அறங்காவலா்கள் மற்றும் ஆய்வாளா்கள், வங்கி ஊழியா்கள் ஆகியோா் முன்னிலையில் உண்டியல்கள் திறக்கபட்டு, காணிக்கை எண்ணும் பணியும் நடைபெற்றது.