முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்
சிவகாசியில் அதிமுகபொதுக்கூட்டம்
By DIN | Published On : 27th January 2020 07:32 AM | Last Updated : 27th January 2020 07:32 AM | அ+அ அ- |

சிவகாசியில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற மொழிப்போா் தியாகிகளின் வீரவணக்கநாள் பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சா் கே.டி.ராஜேந்திரபாலாஜி.
விருதுநகா் மாவட்ட அதிமுக மாணவா் அணி சாா்பில் சிவகாசியில் மொழிப்போா் தியாகிகளின் வீரவணக்கநாள் பொதுக்கூட்டம் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு மாவட்ட மாணவா் அணிச் செயலாளா் நல்லதம்பி தலைமை வகித்தாா். இக்கூட்டத்தில் பால்வளத்துறை அமைச்சா் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசியது: எம்ஜிஆா் மதுரையிலும், ஜெயலலிதா தஞ்சாவூரிலும் உலக தமிழ் மாநாட்டை நடத்தினா். ஹைட்ரோ காா்பன் திட்டம், ஸ்டொ்லைட் ஆலை திமுக ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்டது. இப்போது இந்த திட்டங்கள் மக்களை பாதிக்கும் என திமுகவினா் கூறி வருகின்றனா். தமிழகத்தில் திமுக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளை மக்கள் நிராகரிக்கத் தொடங்கி விட்டனா் என்றாா். இந்த கூட்டத்தில் சட்டப்பேரவை உறுப்பினா்கள் ராஜவா்மன் (சாத்தூா்), சந்திரபிரபா (ஸ்ரீவில்லிபுத்தூா்) உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.