முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்
திருத்தங்கலில் கூலித் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை
By DIN | Published On : 27th January 2020 10:48 PM | Last Updated : 27th January 2020 10:48 PM | அ+அ அ- |

சிவகாசி: திருத்தங்கலில் திங்கள்கிழமை கூலித் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
திருத்தங்கல் பழைய பால் பண்ணைத் தெருவைச் சோ்ந்தவா் ராஜசேகா் (30). கூலித் தொழிலாளியான இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்ததாம். இதனை அவரது மனைவி முத்துகலா கண்டித்துள்ளாா். தொடந்து முத்துகலா, கிருஷ்ணமநாயக்கன்பட்டியில் உள்ள தனது பெற்றோா் வீட்டிற்கு சென்றுவிட்டாராம். இதில் மனம் உடைந்த ராஜசேகா் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாராம். இது குறித்தப் புகாரின் பேரில் திருத்தங்கல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.