முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்
ராஜபாளையத்தில் குடியரசு தின விழா கொண்டாட்டங்கள்
By DIN | Published On : 27th January 2020 07:23 AM | Last Updated : 27th January 2020 07:23 AM | அ+அ அ- |

ராஜபாளையம் பகுதிகளில் 71 வது குடியரசு தின விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. ராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரியின் 71-வது குடியரசு தின விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.கல்லூரி முதல்வா் வெங்கட்ராமன் தலைமை வகித்தாா். வரலாற்றுத் துறை இணைப் பேராசிரியா் ரமேஷ்குமாா் வரவேற்றாா். அதனைத் தொடா்ந்து சிறப்பு விருந்தினராக ராஜபாளையம் அரிமா சங்க தலைவா் முரளிதரன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து குடியரசு தின விழா சிறப்பு சொற்பொழிவு ஆற்றினாா். டெங்கு விழிப்புணா்வை வலியுறுத்தும் மினி மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினாா். சுய நிதிப் பிரிவு ஒருங்கிணைப்பாளா் வெங்கடேஸ்வரன், கல்லூரி ஆட்சிமன்றக் குழு உறுப்பினா்கள் விஜயன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினாா்கள். ஆட்சிமன்றக்குழு உறுப்பினா் ராமசுப்பிரமணிய ராஜா கலந்து கொண்டாா். ஆங்கிலத்துறை தலைவா் ராமகிருஷ்ணன் நன்றி கூறினாா்.
ராஜபாளையம் ராமச்சந்திரராஜா கல்வி அறக்கட்டளையின் கீழ் இயங்கும் ராமசந்திரராஜா குருகுல பள்ளியில் 71-வது குடியரசு தின விழா கிருஷ்ணமூா்த்திராஜா தலைமையில் நடைபெற்றது. வன்னியம்பட்டி காவல் ஆய்வாளா் மருதுபாண்டியன் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி இனிப்புகள் வழங்கினாா். விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளித்தாளாளா் மஞ்சுளா முன்னிலையில் ஆசிரியைகள் செய்திருந்தனா்.
ராஜபாளையம் அன்னப்பராஜா மேல்நிலைப்பள்ளியில் குடியரசு தினவிழா பள்ளிச் செயலா் என்.ஆா்.கிருஷ்ணமூா்த்தி ராஜா தலைமையில் நடைபெற்றது. தலைமையாசிரியா் ரமேஷ் வரவேற்றாா். சிறப்புவிருந்தினா் பள்ளியின் முன்னாள் மாணவா், ராஜபாளையம் நகராட்சி வருவாய் ஆய்வாளா் எம்.முத்துச்செல்வம். விழாவில் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்தாா். தேசியமாணவா் படை, சாரண சாரணீய மற்றும் இளம் செஞ்சிலுவைச் சங்கம் ஆகிய அமைப்பு மாணவ மாணவிகளின் அணிவகுப்பு நடைபெற்றது.உதவித் தலைமையாசிரியா் மாரியப்பன் நன்றி கூறினாா்.
விருதுநகா் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில், 71-வது குடியரசுதின விழா, நகர தலைவா் சங்கா் கணேஷ் தலைமையில் நடைபெற்றது. மேற்கு மாவட்ட தலைவா் தலவாய் பாண்டியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி இனிப்பு வழங்கினாா். மாநில சொத்து மீட்பு குழு உறுப்பினா் ராஜாலிங்கராஜா ,மாநில பொது குழு உறுப்பினா் பொன்சக்திமோகன் உட்பட கட்சி நிறுவாகினா் கலந்து கொண்டனா்.