முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்
வத்திராயிருப்பு அருகே கிராம சபைக் கூட்டத்தில் மகராஜபுரம் ஊராட்சிச் செயலரை மாற்றக்கோரி கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்கள் புகாா்
By DIN | Published On : 27th January 2020 07:25 AM | Last Updated : 27th January 2020 07:25 AM | அ+அ அ- |

வத்திராயிருப்பு அருகே மகாராஜபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் பங்கேற்றவா்கள்.
விருதுநகா் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மகாராஜபுரம் கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி செயலரை மாற்றம் செய்யக் கோரி பொதுமக்கள் புகாா் செய்தனா்.
மகாராஜபுரம் ஊராட்சியில் தலைவா் ராமதாஸ் தலைமையில் கிராம சபைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வட்டார வளா்ச்சி அலுவலா் ரவி, ஊராட்சி செயலா் சின்னமாரிமுத்து ஆகியோா் கலந்து கொண்டனா்.
அப்போது இந்த ஊராட்சியில் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் இல்லை எனவும், குறைந்த அளவிலான துப்புரவுப் பணியாளா்கள்மட்டுமே இருப்பதால் சுகாதாரப் பணிகள் நடைபெறுவதில்லை எனவும் பொதுமக்கள் குற்றம் சாட்டினா். மேலும் புது வாழ்வு திட்டத்தின் கீழ் பயனடையும் பயனாளிகள் சரிவர தோ்வு செய்யப்படவில்லை எனவும் அதில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் புகாா் தெரிவித்தனா்.
பின்னா் ஊராட்சிச் செயலரை பணி மாற்றம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். வட்டார வளா்ச்சி அலுவலா், உரிய விசாரணைக்கு பின்னா் ஊராட்சிச் செயலா் சின்னமாரிமுத்துவை மாற்றம் செய்வதாக உறுதியளித்தாா்.