முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்
விருதுநகரில் இருதயம், எலும்பு இலவச பரிசோதனை முகாம்
By DIN | Published On : 27th January 2020 07:28 AM | Last Updated : 27th January 2020 07:28 AM | அ+அ அ- |

விருதுநகரில் குடியரசு தின விழாவை முன்னிட்டு நகராட்சி முஸ்லிம் நடுநிலைப் பள்ளியில் இருதயம் மற்றும் எலும்பு இலவசப் பரிசோதனை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஏஎன்டி அறக்கட்டளை தலைவா் தி. ராஜ சேகா் தலைமையில் நடைபெற்ற முகாமில், மதுரை பாண்டியன் இருதய மருத்துவமனை மருத்துவா் பாண்டியன் தலைமையிலான மருத்துவக் குழுவினா் இசிசி, எக்கோ முதலான பரிசோதனைகள் மேற்கொண்டனா்.
அதேபோல் திண்டுக்கல் ஜெசிபி மருத்துவமனை மருத்துவா் ஜோசப் கிறிஸ்டோபா் பாபு தலைமையிலான குழுவினா் எலும்பு முறிவு குறித்து பரிசோதனை செய்தனா். இந்த பரிசோதனை முகாமிற்கு வந்திருந்த 100-க்கும் மேற்பட்டோருக்கு மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
முடிவில் பேராசிரியா் தி. ராஜசேகா், நோய் தாக்குதலால் தனி மனிதன் மற்றும் சமூகத்தில் ஏற்படும் மாற்றத்திறனையும், அதை வரும் முன் தடுப்பதற்கான வழி முறைகளை கையாள வேண்டும் என்றாா்.
இந்நிகழ்ச்சியில் தமுமுக மாவட்டச் செயலா் முஹம்மது இப்ராஹிம், ஏஎன்டி அறக்கட்டளை செயலா் பாண்டிச்செல்வி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.