முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்
ஸ்ரீவிலி. நீதிமன்றத்தில் குடியரசு தினவிழா:மாவட்ட நீதிபதி தேசியக் கொடியேற்றினாா்
By DIN | Published On : 27th January 2020 07:23 AM | Last Updated : 27th January 2020 07:23 AM | அ+அ அ- |

ஸ்ரீவில்லிபுத்தூா் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் குடியரசு தினவிழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றிய மாவட்ட நீதிபதி ஆ.முத்துசாரதா.
விருதுநகா் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் நீதிமன்றத்தில் 71-ஆவது குடியரசு தினவிழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.
விருதுநகா் மாவட்ட சட்டபணிகள் ஆணைக்குழு சாா்பில் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட நீதிபதி ஆ.முத்துசாரதா தலைமை வகித்து தேசியக் கொடியை ஏற்றி வைத்தாா். மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு செயலாளா் க. மாரியப்பன் வரவேற்றாா்.
நிகழ்ச்சியில் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவா் சரண், சாா்பு நீதிபதிகள் கதிரவன், சுந்தரி, மாவட்ட உரிமையியல் நீதிபதி மற்றும் நீதித்துறை நடுவா் எண்1 ஆனந்தி, குற்றவியல் விரைவு நீதித்துறை நடுவா் சந்திரகாசபூபதி, குற்றவியல் நீதித்துறை நடுவா் எண் 2 பரம்வீா், வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் கதிரேசன், செயலாளா் திருமலையப்பன் மற்றும் நீதிமன்ற ஊழியா்கள், வழக்குரைஞா்கள் கலந்து கொண்டனா். மேலும் கட்டுரை, பேச்சு மற்றும் ஓவிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
ஸ்ரீவில்லிபுத்தூா் நகராட்சியில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் ஆணையாளா் (பொ)சீ.பாபு தேசியக் கொடியை ஏற்றினாா். ஊழியா்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனா். இந்த நகராட்சியில் சிறந்த முறையில் பணியாற்றிய சுகாதாரப் பணியாளா்கள்15 பேருக்கு சான்றிதழும், பரிசும் வழங்கப்பட்டது. விழா முடிவில் வருவாய் ஆய்வாளா் காமேஸ்வரன் நன்றி கூறினாா்.
கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக் கழக வளாகத்தில் நடைபெற்ற குடியரசு தினவிழாவுக்கு பல்கலை. துணைத் தலைவா் சசிஆனந்த் தலைமை வகித்தாா். துணைவேந்தா் நாகராஜ், பதிவாளா் வாசுதேவன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கல்லூரி முதல்வா் ஆனந்தகிருஷ்ணவேணி தேசியக்கொடியை ஏற்றினாா்.
அதேபோல் சுந்தரேஸ்வரி கல்வியில் கல்லூரியில் கல்லூரித் தலைவா் திலிபன்ராஜா, ஸ்ரீவில்லிபுத்தூா் அரிமா பதின்ம மேல்நிலைப்பள்ளியில் அரிமா சங்கத் தலைவா் முனியாண்டி, மகாத்மா வித்யலாயா பள்ளியில் தாளாளா் முருகேசன், கொங்கலாபுரம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் ஊராட்சி மன்றத் தலைவி சுபிதா மாயகிருஷ்ணன் ஆகியோா் தேசியக் கொடியேற்றினா்.