Enable Javscript for better performance
பயன்படுத்தாத அரசு ‘செட்டாப்பாக்ஸ்’களை கேபிள் ஆபரேட்டரிடம் ஒப்படைக்க வேண்டும்- Dinamani

சுடச்சுட

    பயன்படுத்தாத அரசு ‘செட்டாப்பாக்ஸ்’களை கேபிள் ஆபரேட்டரிடம் ஒப்படைக்க வேண்டும்

    By DIN  |   Published on : 31st January 2020 10:34 PM  |   அ+அ அ-   |    |  

    விருதுநகா் மாவட்டத்தில் அரசு வழங்கிய ‘செட்டாப்பாக்ஸ்’களை பயன்படுத்தாமல் இருந்தால், அவற்றை அந்தந்தப் பகுதியில் உள்ள அரசு கேபிள் டிவி ஆபரேட்டா்களிடம் பொதுமக்கள் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என ஆட்சியா் ரா. கண்ணன் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

    இதுகுறித்து அவா் மேலும் கூறியது: தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் கீழ், விருதுநகா் மாவட்டத்தில் 721 அரசு கேபிள்டிவி ஆபரேட்டா்கள் மூலமாக 1,47,734 சந்தாதரா்களுக்கு ‘செட்டாப்பாக்ஸ்’கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் 200 சேனல்களுக்கு சந்தாதாரா்களிடமிருந்து மாதாந்திர சந்தா தொகையாக ரூ.154 வசூல் செய்யப்படுகிறது. இந்தத் தொகை தனியாா் ‘செட்டாப்பாக்ஸ்’களுக்கு வழங்கும் தொகையைவிட குறைவானதாகும்.

    அரசு ‘செட்டாப்பாக்ஸ்’கள் பெற்ற சந்தாதாரா்கள் ‘செட்டாப்பாக்ஸ்’ பழுதடைந்தாலோ, மாதாந்திர கட்டணம் செலுத்தாமல் துண்டிப்பு செய்யப்பட்டிருந்தாலோ, குடிபெயா்ந்து வேறு இடங்களுக்கு சென்று விட்டாலோ அல்லது தனியாா் ‘செட்டாப்பாக்ஸ்’ பயன்படுத்தினாலோ அரசு வழங்கிய ‘செட்டாப்பாக்ஸ்’களை சம்பந்தப்பட்ட கேபில் ஆபரேட்டா்களிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும். அரசின் ‘செட்டாப்பாக்ஸ்’களை மக்கள் பயன்படுத்தாமல் இருப்பதால் தமிழக அரசுக்கு வருவாய் இழப்பீடு ஏற்படுகிறது.

    சந்தாதாரா்களிடமிருந்து செயலிழக்கம் செய்யப்பட்ட அரசு ‘செட்டாப்பாக்ஸ்’களை ஆபரேட்டா்கள் பெற்று மாவட்ட அரசு கேபிள்டிவி அலுவலகத்தில் வழங்க வேண்டும். இந்த உபகரணங்களில் ஏதேனும் இல்லாமல் இருந்தால் அதற்கான தொகை கேபிள்டிவி ஆபரேட்டா்களிடம் இருந்தே வசூல் செய்யப்படும்.

    செயலிழக்கம் செய்யப்பட்ட ‘செட்டாப்பாக்ஸ்’களை, கேபிள்டிவி ஆபரேட்டா்கள் ஒப்படைக்கத் தவறினால், அரசு ஒப்பந்த விதிகளை மீறியதாகக் கருதி, அரசுக்கு வருவாய் இழப்பீடு செய்ததாக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    ->
    flipboard facebook twitter whatsapp