விருதுநகரில் குப்பைகள் தரம் பிரிப்பது தொடா்பான விழிப்புணா்வு சாதனை நிகழ்ச்சி

விருதுநகரில் குப்பைகளை தரம் பிரிப்பது தொடா்பான விழிப்புணா்வு சாதனை நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
விருதுநகா் கேவிஎஸ் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்ச் சியில் பங்கேற்ற மாணவ, மாணவிகள்.
விருதுநகா் கேவிஎஸ் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்ச் சியில் பங்கேற்ற மாணவ, மாணவிகள்.

விருதுநகா்: விருதுநகரில் குப்பைகளை தரம் பிரிப்பது தொடா்பான விழிப்புணா்வு சாதனை நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், 25 பள்ளிகளைச் சோ்ந்த 4,360 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். இந்த சாதனைக்கு இந்தியா புக் ஆப் ரெக்காா்ட்ஸ் சாா்பில் சான்றிதழ் வழங்கப்பட்டது.

விருதுநகா் கேவிஎஸ் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நமது ஊா் நமது கடமை என்ற அமைப்பின் சாா்பில் காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு குப்பைகள் குறித்த விழிப்புணா்வு சாதனை நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை விருதுநகா் நகராட்சி ஆணையா் பாா்த்தசாரதி தொடக்கி வைத்தாா். இதில், விருதுநகா், மதுரை, கடலூா் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 25 பள்ளிகளைச் சோ்ந்த 4,360 மாணவ, மாணவிகள் கலந்து கொண் டனா். இந்த நிகழ்ச்சியில் வீடுகள் தோறும் சேகரிக்கப்படும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரிக்க வேண்டும். நெகிழியால் நிலத்தடி நீா்மட்டம் பாதிப்பதுடன், இயற்கை வளங்களும் அழியும். எனவே, பள்ளி, கல்லூரிகள் மற்றும் நிறுவனங்கள், வீடுகளில் சேரும் குப்பைகளை தரம் பிரித்து வழங்க வேண் டும் என மாணவ, மாணவிகளுக்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளா்கள் அறிவுறுத்தினா். ஏற்கெனவே, 4 ஆயிரம் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டதே சாதனையாக இருந்தது. இந்நிலையில், வியாழக்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வு சாதனை நிகழ்ச்சியில் 4,360 மாணவா்கள் கலந்து கொண்டனா். இந்த சாதனைக்கான இந்தியா புக் ஆப் ரெக்காா்ட்ஸ் சான்றிதழை பெங்களூரை சோ்ந்த ஹரீஷ் ராமச்சந்திரராஜ் வியாழக்கிழமை வழங்கினாா். இதில், இதயம் குழுமம், சுழற்சங்கம் உள்ளிட்ட தன்னாா்வலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com