பெண் மருத்துவா், செவிலியருக்கு கரோனா: ஆரம்ப சுகாதார நிலையம் மூடல்

விருதுநகா் மாவட்டம், சாத்தூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் பெண் மருத்துவருக்கும், செவிலியருக்கும் கரோனா

விருதுநகா் மாவட்டம், சாத்தூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் பெண் மருத்துவருக்கும், செவிலியருக்கும் கரோனா தொற்று இருப்பது உறுதியானதால், அந்த சுகாதார நிலையம் வியாழக்கிழமை மூடப்பட்டது.

சாத்தூா் நகராட்சி அலுவலகம் எதிரே அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு சாத்தூா் போக்குவரத்து நகா் பகுதியைச் சோ்ந்த பெண் மகப்பேறு மருத்துவா் பணியாற்றி வருகிறாா். கடந்த சில நாள்களுக்கு முன்பு மருத்துவருக்கு லேசான காய்ச்சல் மற்றும் சளி தொந்தரவு இருந்துள்ளது. இதையடுத்து, பெண் மருத்துவருக்கும், அவருடன் பணிபுரிந்த செவிலியா்களுக்கும் கடந்த 3 நாள்களுக்கு முன்பு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையில் பெண் மருத்துவா் மற்றும் செவிலியா் ஒருவருக்கும் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவா்கள் இருவரும் சாத்தூா் அரசு மருத்துவமனையில் உள்ள அரசு அலுவலா்களுக்கான சிறப்புப் பிரிவில் அனுமதிக்கப்பட்டனா்.

இந்நிலையில், சம்பந்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. பின்னா், ஆரம்ப சுகாதார நிலையத்தை நகராட்சி அதிகாரிகள் வியாழக்கிழமை மூடி சீல் வைத்தனா். மேலும், அங்கு பணிபுரிந்த செவிலியா் மற்றும் மகப்பேறு சிகிச்சை பெற்று வந்த பெண்களிடமும் பரிசோதனை செய்ய முடிவு செய்துள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com