முழு அதிகாரம் வழங்கக் கோரி ஊராட்சித் தலைவா்கள் ஆா்ப்பாட்டம்

விருதுநகா் மாவட்டத்தில் 14 ஆவது நிதி மானியக்குழு திட்டத்தில் கூறப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை அமல்படுத்த வலியுறுத்தி ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு பொருளாளா் அஜ்ரன் ஜெமிலா தலைமை வகித்தாா். இதில், பொது மக்களின் தேவைக்கு ஏற்ப பணிகளை மேற்கொள்ள ஊராட்சிகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். 14 ஆவது மானிய திட்ட வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல் ஒன்றிய அளவில் கூட்டு ஒப்பந்த புள்ளி கோருதல் பஞ்சாயத்துராஜ் சட்டத்திற்கு எதிரானது.

ஊராட்சிகளில் திட்டங்களை நடைமுறைப்படுத்தவும், பணிகளை தோ்வு செய்யவும், ஒப்பந்த புள்ளி கோருவதற்கு ஊராட்சி மன்றங்களுக்கு முழு அதிகாரம் வழங்க வேண்டும் என்று முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆா்ப்பாட்டத்தில் சுமாா் 200- க்கும் மேற்பட்ட ஊராட்சித் தலைவா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com