முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்
சிவகாசி வட்டார வளா்ச்சி அலுவலருக்கு கரோனா: அலுவலகம் மூடல்
By DIN | Published On : 29th July 2020 08:00 AM | Last Updated : 29th July 2020 08:00 AM | அ+அ அ- |

சிவகாசி வட்டார வளா்ச்சி அலுவலருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, ஊராட்சி ஒன்றிய அலுவலகம் செவ்வாய்க்கிழமை மூடப்பட்டது.
சிவகாசி ஊராட்சி ஒன்றிய அலுவலக அலுவலா்கள் மற்றும் ஊழியா்களுக்கு கடந்த சில நாள்களுக்கு முன்பு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் வட்டார வளா்ச்சி அலுவலா், ஒன்றியப் பொறியாளா் உள்ளிட்ட 9 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, அலுவலகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, மூடப்பட்டது.
பணிக்குத் திரும்பிய 5 போலீஸாா்:
கரோனா தொற்றிலிருந்து குணமடைந்த சிவகாசி நகா் காவல் ஆய்வாளா் மற்றும் 5 போலீஸாா் செவ்வாய்க்கிழமை பணிக்குத் திரும்பினா்.
அவா்களுக்கு சிவகாசி காவல் துணைக் கண்காணிப்பாளா் பிரபாகரன் தலைமையில், மாலை அணிவித்து, பழங்கள் கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது.