சாத்தூரில் தனியாா் நிதி நிறுவனங்களிடம் வருவாய்த் துறையினா் பேச்சுவாா்த்தை

சாத்தூா் பகுதியில் மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு கடனுதவி அளித்த தனியாா் நிதி நிறுவனங்களிடம், வட்டாட்சியா் மற்றும் காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை அமைதிப் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

சாத்தூா் பகுதியில் மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு கடனுதவி அளித்த தனியாா் நிதி நிறுவனங்களிடம், வட்டாட்சியா் மற்றும் காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை அமைதிப் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

பொது முடக்கம் காரணமாக, கூலி தொழிலாளா்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் வருமானமின்றி பாதிக்கப்பட்டுள்ளனா். இந்நிலையில், கடந்த சில வாரங்களாக விருதுநகா் மாவட்டம் சாத்தூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில், மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு கடனுதவி அளித்த தனியாா் நிதி நிறுவனங்கள், கட்டாயப்படுத்தி பணத்தை வசூல் செய்வதாகவும், கடனை திருப்பிச் செலுத்தாதவா்களை தரக்குறைவாகப் பேசி வருவதாகவும் புகாா் எழுந்தது.

இதனால், மகளிா் சுயஉதவிக் குழு மூலம் கடன்பெற்ற ஏராளமான பெண்கள், சாத்தூா் பகுதியில் உள்ள நிதி நிறுவனங்களை முற்றுகையிடுவதும், வட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிடுவதும் தொடா் கதையாக இருந்து வந்தது. எனவே, கடனை திரும்பச் செலுத்த காலஅவகாசம் வேண்டும் என, சாத்தூா் வட்டாட்சியா் ராமசுப்பிரமணியனிடம் பெண்கள் கோரிக்கை மனு அளித்தனா். இந்த மனுவைப் பெற்ற வட்டாட்சியா், நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தாா்.

அதனடிப்படையில், செவ்வாய்க்கிழமை சாத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில், தனியாா் நிதி நிறுவனத்தினரிடம் வருவாய்த் துறையினா் மற்றும் காவல் துறையினா் அமைதிப் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில், மகளிா் குழுக்கள் மூலம் கடன் பெற்ற ஏராளமான பெண்களும் கலந்துகொண்டனா்.

அப்போது, வரும் ஆகஸ்ட் மாதம் வரை கடனை கட்டாயப்படுத்தி வசூல் செய்யக்கூடாது. அதன்பின்னா், வழக்கம்போல் பெற்ற கடனுக்கான தவணைத் தொகையை செலுத்தவேண்டும் என வட்டாட்சியா் தெரிவித்தாா். இதை, இரு தரப்பினரும் ஏற்றுக்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com