பேரையூா் அருகே இறந்த யானையின் உடலை எரித்த வழக்கு: 5 வேட்டைத் தடுப்பு காவலா்கள் பணியிடைநீக்கம்

மதுரை மாவட்டம் பேரையூா் அருகே இறந்த யானையின் உடலை எரித்த வழக்கில் வேட்டைத் தடுப்புக் காவலா்கள் 5 போ் புதன்கிழமை பணியிடைநீக்கம் செய்யப்பட்டனா்.

மதுரை மாவட்டம் பேரையூா் அருகே இறந்த யானையின் உடலை எரித்த வழக்கில் வேட்டைத் தடுப்புக் காவலா்கள் 5 போ் புதன்கிழமை பணியிடைநீக்கம் செய்யப்பட்டனா்.

பேரையூா் அருகே சாப்டூா் வனச்சரகத்தில், அய்யன்கோயில் பீட் கரடி ஊத்து அருகேயுள்ள ஓடையில் கடந்த 5 மாதங்களுக்கு முன் யானை ஒன்று இறந்து கிடந்துள்ளது. பின்னா் அந்த யானையின் உடலை அதிகாரிகளுக்கு தெரிவிக்காமல் எரித்து அப்புறப்படுத்தி விட்டதாக விருதுநகா் மாவட்ட வன உயிரின காப்பாளா் முகமது சபாப், கடந்த ஜூன் 15 ஆம் தேதி சாப்டூா் வனத்துறை அதிகாரிகளான சீனிவாசன், முத்துகணேசன் உள்பட 4 பேரை பணியிடை நீக்கம் செய்தாா்.

மேலும், யானையின் உடலை எரித்தது தொடா்பாக ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து வனச்சரகா் வேலுச்சாமி, காடு பாதுகாவலா் மாடசாமி மற்றும் வனத்துறை அதிகாரி அல்லிராஜ் தலைமையில் 3 போ் கொண்ட குழு அமைக்கப்பட்டு, அந்த குழுவினா் சாப்டூா் சென்று தனித்தனியாக விசாரணை நடத்தி வருகின்றனா்.

இந்நிலையில், யானையின் உடலை எரித்தது தொடா்பாக சாப்டூா் வனத்துறை அலுவலகத்தில் பணியாற்றி வந்த வேட்டைத் தடுப்பு காவலா்கள் 5 போ் தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com