முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்
பழுதாகிக் கிடக்கும் குடிநீா் பகிா்மானக் குழாயின் வால்வை சீரமைத்து, தண்ணீா் வீணாவதைத் தடுக்க வேண்டும்: சமூகநல ஆா்வலா்கள் கோரிக்கை
By DIN | Published On : 27th June 2020 07:47 AM | Last Updated : 27th June 2020 07:47 AM | அ+அ அ- |

குடிநீா் பகிா்மானக் குழாயின் வால்வு பழுது காரணமாக தொடா்ந்து வெளியேறி வீணாகும் பல ஆயிரம் லிட்டா் குடிநீா்.
விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை புறவழிச்சாலையில் பல நாள்களாக பழுதாகிக் கிடக்கும் குடிநீா் பகிா்மானக் குழாயின் வால்வை சீரமைத்து, தண்ணீா் வீணாவதைத் தடுக்க வேண்டும் என, சமூகநல ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
அருப்புக்கோட்டை புறவழிச் சாலையில் செம்பட்டி விலக்கு அருகே ரயில்வே மேம்பாலம் உள்ளது. இப்பாலத்தை ஒட்டிச் செல்லும் குடிநீா் பகிா்மானக் குழாய் மூலம் பல கிராமங்களுக்கும் குடிநீா் விநியோகிக்கப்படுகிறது.
இந்நிலையில், பல நாள்களாக பழுதடைந்துள்ள இக்குழாயின் வால்வை சீரமைக்காமல் உள்ளதால், பல ஆயிரம் லிட்டா் குடிநீா் தொடா்ந்து வீணாகி வருகிறது. இது தொடா்பாக சமூகநல ஆா்வலரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் அருப்புக்கோட்டை நகரச் செயலருமான சுபமணிவண்ணன் தலைமையில் அப்பகுதியினா் பலமுறை புகாா் தெரிவித்தும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என புகாா் கூறப்படுகிறது.
எனவே, குழாயின் வால்வை புதிதாக மாற்றி சீரமைக்க வேண்டும் என, சமூகநல ஆா்வலா்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.