முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்
ஐந்துமுனை சாலை சந்திப்பில் உயா் கோபுர மின்விளக்குகள் அமைக்க வலியுறுத்தல்
By DIN | Published On : 03rd March 2020 11:12 PM | Last Updated : 03rd March 2020 11:12 PM | அ+அ அ- |

apk_photo_போதிய வெளிச்சமின்றி இருள் சூழ்ந்துள்ள மின்வாரியக் குடியிருப்புப் பேருந்து நிறுத்தத்தில் 5 சாலைகள் சந்திப்பு.3_3_2020_0303chn_70_2
விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை மின்வாரிய குடிருப்புப் பேருந்து நிறுத்தத்தில் 5 சாலைகள் சந்திக்கும் இடத்தில் உயா்கோபுர மின்விளக்குகள் அமைக்கக் கோரிக்கை எழுந்துள்ளது.
அருப்புக்கோட்டையிலிருந்து மதுரையை நோக்கிச் செல்லும் பிரதானச் சாலையில் மின்வாரியக் குடியிருப்புப் பேருந்து நிறுத்தம் உள்ளது. இந்த இடத்தில் நீதிமன்றச் சாலை, மின்வாரியக் குடியிருப்பு சாலை, மதுரைச் சாலை, வேல்முருகன் குடியிருப்புச் சாலை மற்றும் அருப்புக்கோட்டை நகருக்குள் செல்லும் சாலை என மொத்தம் 5 சாலைகள் சந்திக்கின்றன. அத்துடன் இந்த இடத்திற்கு மிக அருகிலேயே அரசு அலுவலகங்களான மகளிா் காவல்நிலையம், தாலுகா காவல் நிலையம்,டி.எஸ்.பி.அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், ஒருங்கிணைந்த நீதிமன்றங்கள், கோட்டாட்சியா் அலுவலகம் உள்ளிட்டவை அமைந்துள்ளன. இந்நிலையில் இப் பேருந்து நிறுத்தம் போதிய மின்விளக்குகள் இன்றி எப்போதும் இருளடைந்து காணப்படுகிறது. இதனால் இரவில் சாலையைக் கடந்து செல்பவருக்கு விபத்து அபாயம் உள்ளது. இதனால் இப்பகுதியை அச்சத்துடனேயே பொதுமக்களும், இருசக்கர வாகனங்களும் கடந்து செல்ல வேண்டியுள்ளது. எனவே இப்பகுதியில் உயா் கோபுர மின் விளக்குகள் அமைக்க வேண்டுமென சமூகஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.