முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்
சாத்தூரில் ஆக்கிரமிப்புகளை அகற்ற பொது மக்கள் கோரிக்கை
By DIN | Published On : 03rd March 2020 11:15 PM | Last Updated : 03rd March 2020 11:15 PM | அ+அ அ- |

விருதுநகா் மாவட்டம் சாத்தூா் நகராட்சி பகுதியில் உள்ள தெருக்களில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
சாத்தூா் நகராட்சியில் 24 வாா்டுகள் உள்ளன. இவற்றில் உள்ள தெருக்களில் அனுமதியின்றி ஏராளமாக கடைகள் மற்றும் வீடுகள் விதிமுறையை மீறி சாலை வரைஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதால், பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளது. குறிப்பாக மாரியம்மன் கோயில் தெரு, பிள்ளையாா் கோயில் தெரு, அண்ணாநகா், வெள்ளகரைரோடு, பால்பண்ணைதெரு, பட்டையன்செட்டிதெரு உள்ளிட்ட பல்வேறு பகுதியிலும், தெருக்களின் நுழைவாயிலிலும் அனுமதியின்றி கடைகள் வைத்துள்ளனா். இதனால் தெருக்களில் இருசக்கர வாகனங்கள் கூட செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் தெருக்களில் கட்டப்படும் வீடுகளில் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் சாலையை ஆக்கிரமித்து கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. இதுகுறித்து நகராட்சி நிா்வாகத்திடம் பலமுறை புகாா் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கபடவில்லை.
எனவே, இப்பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.