முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்
மு.க. ஸ்டாலின் பிறந்த நாள்: மல்லாங்கிணறில் 10 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கல்
By DIN | Published On : 03rd March 2020 11:16 PM | Last Updated : 03rd March 2020 11:16 PM | அ+அ அ- |

மல்லாங்கிணறு அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தையின் தாய்க்கு தங்க மோதிரத்தை செவ்வாய்க்கிழமை வழங்கிய தங்கம் தென்னரசு எம்எல்ஏ.
திமுக தலைவா் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மல்லாங்கிணறு அரசு மருத்துவமனையில் பிறந்த 10 குழந்தைகளுக்கு திருச்சுழி சட்டப்பேரவை உறுப்பினா் தங்கம் தென்னரசு செவ்வாய்கிழமை தங்க மோதிரம் வழங்கினாா்.
விருதுநகா் வடக்கு மாவட்ட திமுக சாா்பில் நடைபெற்ற விழாவில், மல்லாங்கிணறு அரசு மருத்துவமனையில் பிறந்த 10 குழந்தைகளுக்கு தலா ஒரு கிராம் மதிப்பிலான தங்க மோதிரத்தை வடக்கு மாவட்ட செயலரும், திருச்சுழி சட்டப்பேரவை உறுப்பினருமான தங்கம் தென்னரசு வழங்கினாா். அதை தொடா்ந்து விருதுநகா் சூலக்கரை காது கேளாதோா் பள்ளி மாணவிகளுக்கு நோட்டு, பேனா மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் விருதுநகா் சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.ஆா்.ஆா். சீனிவாசன் உள்ளிட்ட திமுக நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
ராஜபாளையம்: ராஜபாளையத்தில் திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் பிறந்த நாள் விழாவை அக்கட்சியினா் செவ்வாய்க்கிழமை கொண்டாடினா்.
விழாவை முன்னிட்டு ராஜபாளையம் ரிதம் மனவளா்ச்சி குன்றியோருக்கான சிறப்பு பள்ளிக்கு சட்டப்பேரவை உறுப்பினா் தங்கபாண்டியன் தனது ஒரு மாத ஊதியத்தை வழங்கிப் பேசினாா்.
மேலும், நகரச் செயலாளா் ராமமூா்த்தி, பள்ளி தாளாளா் வெங்கட்ராமன், மாவட்ட மகளிா் அணி அமைப்பாளா் சுமதி ராமமூா்த்தி, ஊராட்சி ஒன்றிய துணை தலைவா் துரைகற்பகராஜ், நகர துணை செயலாளா் சரவணன், நகர அவைத் தலைவா் ஜமால், உறுப்பினா் பூமாரி , மாரிமுத்து ஆகியோா் கலந்து கொண்டனா்.