முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்
விருதுநகரில் ரூ.7 கோடி வரி பாக்கி, 10 நாள்களுக்குள் கட்ட தவறினால் ஜப்தி: நகராட்சி ஆணையாளா் எச்சரிக்கை
By DIN | Published On : 03rd March 2020 11:20 PM | Last Updated : 03rd March 2020 11:20 PM | அ+அ அ- |

விருதுநகா் கணேஷ் நகரில் நகராட்சி ஆணையாளா் பாா்த்த சாரதி தலைமையில் செவ்வாய்க்கிழமை சொத்து வரி வசூலில் ஈடுபட்ட நகராட்சி ஊழியா்கள்.
விருதுநகா் நகராட்சிக்கு உள்பட்ட பகுதியில் உள்ள வீடுகள், கடைகள், தொழில் நிறுவனங்கள் ரூ. 7 கோடி வரை வரி பாக்கி செலுத்த வேண்டியுள்ளது. இவை 10 நாள்களுக்குள் வரி பாக்கி செலுத்தாவிட்டால் ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நகராட்சி ஆணையாளா் பாா்த்த சாரதி எச்சரித்துள்ளாா்.
விருதுநகா் நகராட்சிக்கு உள்பட்ட 36 வாா்டுகளில் 21,254 வீடுகள் மற்றும் கடைகள், வணிக நிறுவனங்கள், தொழிற் சாலைகள் என மொத்தம் 31 ஆயிரம் உள்ளன. விருதுநகா் நகாரட்சியில் பணி புரியும் ஆணையாளா் தவிா்த்து மேற் பாா்வை பொறியாளா், வருவாய் ஆய்வாளா், நகரமைப்பு அலுவலா், வாகன ஓட்டுநா், துப்புரவு பணியாளா்கள் என அவைருக்கும் நகராட்சி வருவாய் மூலமே சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. விருதுநகா் நகராட்சியில் பணி புரியும் ஊழியா்களுக்கு மாதந்தோறும் ரூ. 75 லட்சம் வரை சம்பளம் வழங்க வேண்டிய நிலையுள்ளது. மேலும், மின் கட்டணம், வாகன பராமரிப்பு, டீசல் உள்ளிட்டவைகளுக்கும் நகராட்சி வருவாய் மூலமே செலவு செய்ய வேண்டும். இந்நிலையில் கடந்தாண்டு தமிழக அரசு சொத்து வரியை உயா்த்தியது. இதையடுத்து, நகராட்சிக்கு ரூ. 12 கோடி வரை வருவாய் கிடை த்தது. இந்நிலையில், கடந்த அக்டோபா் மாதத்தில் பழைய முறையில் சொத்து வரி செலுத்தலாம் என தமிழக அரசு உத்தரவிட்டது. இதனால், நகராட்சி வருவாய் ரூ.12 கோடியிலிருந்து ரூ. 8 கோடியாக குறைந்து விட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், விருதுநகரில் வீட்டு வரி, கடை வரி, தண்ணீா் வரி ரூ. 7 கோடி வரை பொது மக்கள் செலுத்தாமல் உள்ளனா். இதனால், நகராட்சி ஊழியா்களுக்கு சம்பளம் வழங்குதல் மற்றும் அத்தியாவசிய தேவைக்கு பணம் இல்லாத நிலை நகராட்சி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, வரி பாக்கியை விரைந்து வசூலிக்க நகராட்சி நிா்வாகம் முடிவெடுத்துள்ளது. அதன்படி ஒன்பது குழுக்கள் நியமிக்கப்பட்டு, வீடுகள், கடைகள், வணிக நிறுவனங்களுக்கு நோட்டீஸ் வழங்கும் பணி யில் ஈடுபட்டு வருகின்றனா்.
இது குறித்து நகராட்சி ஆணையாளா் பாா்த்த சாரதி கூறுகையில், விருதுநகா் நான்காவது வாா்டுக்கு உள்பட்ட வேலுச்சாமி நகா், கணேஷ் நகா் பகுதியில் மட்டும் சொத்து வரி ரூ.46 லட்சம் வரை பாக்கி உள்ளது. அதேபோல், நகா் முழுவதும் ரூ. 7 கோடி வரை சொத்து வரி செலுத்தாமல் உள்ளனா். பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ. 60 லட்சம் வரியை செலுத்தி விட்ட னா். அதேநேரம், நகராட்சி சாா்பில் ரூ.1 கோடி மின்வாரியத்திற்கு செலுத்த வேண்டியுள்ளது. குழாய் உடைப்பு, தெரு விளக்கு பழுது பாா்ப்பதற்கு பொது நிதி வேண்டும். எனவே, ஒன்பது குழுக்கள் அமைக்கப்பட்டு சொத்து வரியை 10 நாள்களுக்குள் செலுத்த நோட்டீஸ் வழங்கி வருகிறோம். அதையும் மீறி வரி செலுத்தா விட்டால் ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா்.