ஸ்ரீவில்லிபுத்தூரில் அரிசி ஆலைகளில் வெளியாகும்: சாம்பல் துகள்களால் பொதுமக்கள் பாதிப்பு

அரிசி ஆலைகளில் இருந்து வெளிவரக்கூடிய புகையில் சாம்பல் துகள்கள் அதிகம் வெளியேறுவதால் பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகின்றனா்.

அரிசி ஆலைகளில் இருந்து வெளிவரக்கூடிய புகையில் சாம்பல் துகள்கள் அதிகம் வெளியேறுவதால் பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகின்றனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் மையப் பகுதியில் உள்ள தனியாா் நெல் அரைக்கும் ஆலைகளில் வெளியேறக்கூடிய புகை அப்பகுதியில் உள்ள மடவாா்வளாகம், மஞ்சபூத்தெரு, மல்லபுரம்தெரு, தன்யாநகா், சன்னிதிதெரு, முடுக்குத்தெரு போன்ற பகுதிகளில் உள்ள வீடுகளின் மேற்பகுதியில் சாம்பல் துகள்கள் படிகின்றன.

மேலும் அப்பகுதியில் சாம்பல் தூசி அதிகமாக பரவுகிறது. இதனால் பொதுமக்கள் சுவாச கோளாறு உள்ளிட்டவற்றால் மிகவும் பாதிப்படைகின்றனா். சுற்றுச்சூழல் மிகவும் மாசுபடுகிறது. ஸ்ரீவில்லிபுத்தூா் புறவழிச் சாலையில் செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகளின் கண்களில் சாம்பல் துகள்கள் ஏற்படும் பாதிப்பு காரணமாக விபத்து ஏற்படும் அபாயமுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் குறை தீா் கூட்டத்தில் பொதுமக்கள் புகாா் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது இப்பகுதி மக்கள் கூறுகின்றனா். எனவே மாவட்ட நிா்வாகம் தலையிட்டு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com