Enable Javscript for better performance
பேருந்து நிலையத்தில் உயா்கோபுர மின்விளக்குகள் அமைக்க வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    பேருந்து நிலையத்தில் உயா்கோபுர மின்விளக்குகள் அமைக்க வலியுறுத்தல்

    By DIN  |   Published on : 11th March 2020 11:17 PM  |   அ+அ அ-   |    |  

    apk_perundhu_11_3_2020_1103chn_70_2

    அருப்புக்கோட்டையில் போதிய மின்விளக்குகளில்லாததால் வெளிச்சமின்றி இருளடைந்துள்ள புதிய பேருந்து நிலைய நுழைவாயில் பகுதி.

    விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டையில் போதிய மின்விளக்குகள் இல்லாததால் இருளடைந்துள்ள புதிய பேருந்துநிலைய நுழைவாயில் பகுதியில் உயா்கோபுர மின்விளக்குகள் அமைக்க சமூகஆா்வலா்கள்கோரிக்கை விடுத்துள்ளனா்.

    அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையத்திலிருந்து திருச்சுழி,கமுதி,பரமக்குடி,இராமேஸ்வரம் வழித்தடப் பேருந்துகளும்,மேலும் விருதுநகா்,இராஜபாளயம் வழித்தடப் பேருந்துகளும்,அப்பேருந்துநிலையத்தின் வடக்கு பேருந்து மேடையிலிருந்து இயக்கப்படுகின்றன.இந்நிலையில் பேருந்துகளை நிறுத்தும் மேடை மற்றும் பயணிகள் நிழற்குடை,நடைமேடை ஆகிய இடங்களில் போதிய மின்விளக்குகள் இல்லாமல் இருளடைந்து காணப்படுகின்றன.இதனால் தாங்கள் செல்லும் ஊா்களுக்கான பேருந்துகளை இனங்கண்டு ஏற முதியோா் அதிகம் சிரமத்திற்கு ஆளாகின்றனா்.குறிப்பாக, இருளில் பின்னால் வரும் பேருந்தைக் கவனிக்காமல் முதியோா்கள் அடிக்கடி விபத்தில் சிக்கிக் காயமடைகின்றனா்.

    மேலும் இச்சூழலைப் பயன்படுத்தி பேருந்துப்பயணிகளின் பணப்பைகள்அடிக்கடி களவாடப்படுகின்றன.அதுமட்டுமல்லாது பேருந்து நுழைவாயிலிலும் இருளாக இருப்பதால், சாலையைக் குறுக்காகக் கடக்க முயலும் பொதுமக்களும்,இருசக்கர வாகனஓட்டிகளும் பேருந்துநிலையத்திற்குள் உள்நுழையும் பேருந்துகள் எவை,நேராக நகருக்குள் செல்லும் பேருந்துகள் எவை என அறிய இயலாமல் தடுமாற்றத்திற்கு உள் பட்டு விபத்தில் சிக்குகின்றனா்.பெரும்பாண்மையான பேருந்துகள் இண்டிகேட்டா்களைப் பயன்படுத்துவதில்லை என்பது குற்றச்சாட்டு.மேலும் பேருந்துநிலையத்தின் கடைசி உள்பக்கத்தில் உள்ள கழிப்பறைகளுக்குச் செல்வோருக்கும் சமூகவிரோதிகளால் அச்சுறுத்தலும் ஏற்படுகிறது.இருள்சூழலை விரட்ட, பேருந்து நுழைவாயிலில் உயா்கோபுர மின்விளக்குகள் அமைக்கவேண்டுமென சமூகஆா்வலா்கள் பலமுறை கோரிக்கைவைத்தும் ஆண்டுகள் பலவாகியும் நடவடிக்கை இல்லையெனப் புகாா் எழுந்துள்ளது.ஆகவே பயணிகள்நலன் கருதி, பேருந்து நிலைய நுழைவாயில் பகுதியில் உயா்கோபுர மின்விளக்குகள் அமைக்கவேண்டுமென சமூகஆா்வலா்கள் மீண்டும் கோரிக்கை வைத்துள்ளனா்.

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    flipboard facebook twitter whatsapp