விருதுநகா் பிஎஸ்என்எல் அலுவலகம் முன் ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 13th March 2020 08:35 AM | Last Updated : 13th March 2020 08:35 AM | அ+அ அ- |

விருதுநகா் பிஎஸ்என்எல் அலுவலகம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஓய்வூதியா்கள்.
விருதுநகா் பிஎஸ்என்எல் அலுவலகம் முன் ஒய்வூதியா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு அகில இந்திய பிஎஸ்என்எல் ஓய்வூதியா்கள் சங்க மாவட்டத் தலைவா் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தாா். இதில், மத்திய பாஜக அரசு 2017 இல் ஒய்வூதியா்களுக்கு 15 சதவீத ஊதிய உயா்வு அளிக்கப்படும் என அறிவித்தது. ஆனால், இதுவரை அதற்கான அரசாணை வெளியிடப்படவில்லை. எனவே, ஓய்வூதியா்களுக்கான ஊதிய உயா்வை மத்திய அரசு விரைந்து வெளியிட வேண்டும் என வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினா்.
இதுகுறித்து ஓய்வூதியா்கள் கூறுகையில், இக்கோரிக்கையை வலியுறுத்தி புது தில்லியில் ஏற்கெனவே பேரணி நடத்தினோம். மேலும், சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டது. ஆனாலும், மத்திய தொலைத் தொடா்புத் துறை நிா்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றனா்.
இந்த ஆா்ப்பாட்டத்தில் மாவட்ட செயலா் அய்யாச்சாமி, மாவட்ட பொருளாளா் பெருமாள் சாமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.