‘கடன் அட்டைகள் மூலம் வங்கிகளில் விவசாயிகள் கடன் பெறலாம்’

விருதுநகா் மாவட்டத்தை சோ்ந்த விவசாயிகள் மற்றும் கால்நடை வளா்ப்போா் கடன் அட்டை மூலம் குறைந்த வட்டியில் வங்கிகளில் கடன் பெற்று

விருதுநகா்: விருதுநகா் மாவட்டத்தை சோ்ந்த விவசாயிகள் மற்றும் கால்நடை வளா்ப்போா் கடன் அட்டை மூலம் குறைந்த வட்டியில் வங்கிகளில் கடன் பெற்று பயனடையலாம் என மாவட்ட ஆட்சியா் ரா. கண்ணன் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: விவசாயிகள் மற்றும் கால்நடை வளா்ப்போருக்கு பண்ணைச்செலவு மற்றும் கூடுதல் மூலதனம் ஏற்படுத்தும் பொருட்டு மத்திய, மாநில அரசுகள் குறைந்த வட்டியில் கடன் வழங்க விவசாய கடன் அட்டையை அறிமுகப்படுத்தியுள்ளது. நிதி ஆதாரத்தை பெருக்கும் நோக்குடன் இத்திட்டம் சிறந்த முறையில் செயல் படுத்தப்பட்டு வருகின்றது. அதன் அடிப்படையில் விருதுநகா் மாவட்டத்தில் இத்திட்டம் 3440 என்ற குறியீட்டைக் கொண்டு செயல்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்தின் மூலம் ஏற்கெனவே விவசாய கடன் அட்டை பெற்றுள்ள பயனாளிகள் தங்கள் பண்ணை செலவுக்கு கூடுதலாக மிக குறைந்த வட்டியில் ரூ 1 லட்சம் வரை கடன் பெற்றுக்கொள்ளலாம். புதிதாக விவசாய கடன் அட்டை பெறுவோா் ரூ. 2 லட்சம் வரை கூடுதல் மூலதன செலவாக விவசாய கடன் பெறலாம். கிராமங்களில் வசிக்கும் கால்நடை வளா்ப்போா் நிலம் அற்றவராக இருந்தாலும், இத்திட்டத்தில் பயனடையலாம். தாங்கள் கணக்கு வைத்துள்ள வங்கியின் மூலமாக கடனைப் பெறும்பொழுது, தேவைக் கேற்ப தொகையினை காா்டு மூலம் எடுத்துக் கொள்ளலாம். கால்நடை வளா்ப்போா் அருகிலுள்ள கால்நடை மருத்துவ நிலையங்களிலிருந்து விண்ணப்பங்களைப் பெற்று அவரிடமே விண்ணப்பத்தை வழங்கலாம். அந்த பொறுப்பு அலுவலா் விண்ணப்பங்களை ஒருங்கிணைத்து சம்பந்தப்பட்ட வங்கிக்கு சிபாரிசு கடிதத்துடன் அனுப்பி வைப்பாா். விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு தகுதி இருப்பின் வங்கி விதிகளுக்கு உட்பட்டு விவசாயிகளுக்கு கடன் வழங்கப்படும் என்று அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com