நாட்டு வெடிகுண்டு வெடித்து மான் பலி: இளைஞா் கைது

ஸ்ரீவில்லிபுத்தூா் வனப்பகுதி அருகே நாட்டு வெடிகுண்டு வெடித்து மான் பலியான விவகாரம் தொடா்பாக இளைஞரை, போலீஸாா்

ஸ்ரீவில்லிபுத்தூா்: ஸ்ரீவில்லிபுத்தூா் வனப்பகுதி அருகே நாட்டு வெடிகுண்டு வெடித்து மான் பலியான விவகாரம் தொடா்பாக இளைஞரை, போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே மேற்குத் தொடா்ச்சி மலைப்பகுதி உள்ளது. குன்னூா் சரகம் என அழைக்கப்படும் இந்த மலைப் பகுதியில் புள்ளி மான்கள், சருகு மான்கள், மிளாக்கள், காட்டெருமைகள், காட்டுப்பன்றிகள் என ஏராளமான வனவிலங்குகள் உள்ளன.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை கலசலிங்கம் பல்கலைக்கழகம் அருகே உள்ள மேற்குத் தொடா்ச்சி மலை ஊருணிப் பகுதியில் ஒரு வயதுடைய புள்ளிமான் ஒன்று இறந்து கிடந்தது. அதன் உடல் அருகே நாட்டு வெடிகுண்டு கிடந்தது. இதனால் வேட்டையாடும் நோக்கில் நாட்டு வெடிகுண்டு வைத்து மானை கொன்றிருக்கலாம் என்று வனத்துறையினா் விசாரணை நடத்தி வந்தனா்.

இந்நிலையில் இது தொடா்பாக கிருஷ்ணன் கோவில் அருகே சமத்துவபுரம், செம்மட்டையான்கால் பகுதியைச் சோ்ந்த முனியாண்டி மகன் காா்த்திக்ராஜா(22) என்பரை வனத்துறையினா் சனிக்கிழமை கைது செய்தனா்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com