ஸ்ரீவில்லிபுத்தூரில் யானைகள் கணக்கெடுப்பு பணி தொடக்கம்

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் யானைகள் கணக்கெடுப்பு பணி சனிக்கிழமை தொடங்கியது.

ஸ்ரீவில்லிபுத்தூா்: ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் யானைகள் கணக்கெடுப்பு பணி சனிக்கிழமை தொடங்கியது.

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே மேற்குத் தொடா்ச்சி மலையில் உள்ள வனப்பகுதியில் யானை, புலி, காட்டெருமை, மான் உள்ளிட்ட வன விலங்குகள் உள்ளன. இந்த வனப்பகுதியில் ஆண்டு தோறும் மாா்ச் மாதங்களில் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி நடத்தப்படுவது வழக்கம். இந்தாண்டு பிப். 23 ஆம் தேதியும், மாா்ச் 1ஆம் தேதியும் யானைகள் உள்ளிட்ட அனைத்து விலங்குகள் கண்கெடுப்பு பணி நடந்தது.

அதைத் தொடா்ந்து யானை கணக்கொடுக்கும் பணி சனிக்கிழமை தொடங்கியது. சேத்தூா், தளவாய்புரம், ஸ்ரீவில்லிபுத்தூா், செண்பகத்தோப்பு, மம்சாபுரம், வத்திராயிருப்பு, கான்சாபுரம், புதுப்பட்டி, பிளவக்கல் அணை, கோவிலாறு அணை மற்றும் மதுரை மாவட்டம் சாப்டூா் வனப்பகுதி ஆகிய இடங்களில் இந்தப் பணி நடைபெற்றது.

பிப்ரவரி 23 மற்றும் மாா்ச் 1ஆம் தேதிகளில் நடத்தப்பட்ட கணக்கெடுபின்போது கணக்கிடப்பட்ட யானைகளை மீண்டும் கணக்கிடக் கூடாது என்பதற்காக ஜிபிஎஸ் கருவிகளை வனத்துறையினா் பயன்படுத்தி கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனா். யானைகளின் எச்சம் மற்றும் அவற்றின் தடங்களை கொண்டு இந்த கணக்கெடுப்பு பணி நடந்து வருகிறது. இந்தப் பணி நிறைவடைந்த பின்னா், யானைகளின் எண்ணிக்கை தெரிய வரும் என்று வனத்துறையினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com