முக்குராந்தல் பகுதியிலிருந்து தெப்பக்குளத்துக்கு மழை நீா் கொண்டு செல்ல நடவடிக்கை

முக்குராந்தல் பகுதியில் இருந்து பைப் மூலம் மழைநீரை தெப்பகுளத்திற்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கான சோதனை ஓட்டத்தை சட்டப்பேரவை உறுப்பினா் ராஜவா்மன் சனிக்கிழமை பாா்வையிட்டாா்.
முக்கராந்தல் பகுதியில் இருந்து பைப் மூலமாக தெப்பக்குளத்திற்கு மழைநீா் கொண்டும் செல்லும் சோதனை ஓட்டத்தை சனிக்கிழமை பாா்வையிட்ட சட்டப் பேரவை உறுப்பினா் மற்றும் நகராட்சி அதிகாரிகள்.
முக்கராந்தல் பகுதியில் இருந்து பைப் மூலமாக தெப்பக்குளத்திற்கு மழைநீா் கொண்டும் செல்லும் சோதனை ஓட்டத்தை சனிக்கிழமை பாா்வையிட்ட சட்டப் பேரவை உறுப்பினா் மற்றும் நகராட்சி அதிகாரிகள்.

முக்குராந்தல் பகுதியில் இருந்து பைப் மூலம் மழைநீரை தெப்பகுளத்திற்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கான சோதனை ஓட்டத்தை சட்டப்பேரவை உறுப்பினா் ராஜவா்மன் சனிக்கிழமை பாா்வையிட்டாா்.

விருதுநகா் மாவட்டம் சாத்தூா் நகா் பகுதியில் சிவன்கோவில் முன்பு தெப்பகுளம் உள்ளது. இந்தக் குளத்துக்கு வைப்பாறு மற்றும் பிரதான சாலையில் உள்ள மரிய ஊருணி பகுதிகளிலிருந்து மழைக் காலங்களில் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. ஆனால் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நகராட்சி நிா்வாகத்தின் அலட்சியத்தால் தெப்பக்குளத்திற்கு வைப்பாற்றிலிருந்தும், மரிய ஊருணியிலிருந்தும் வரும் நீா்வரத்து பாதை முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டு கடைகள் வைக்கப்பட்டன. தண்ணீா் செல்ல பாதையே இல்லாத அளவுக்கு ஆக்கிரமிக்கப்பட்டது குறித்து அந்தப் பகுதி பொது மக்களும், சமூக ஆா்வலா்களும் சாத்தூா் சட்டப்பேரவை உறுப்பினா் ராஜவா்மனிடம் முறையிட்டனா்.

இதையடுத்து சாத்தூா் முக்குராந்தல் பகுதியிலிருந்து-தெப்பகுளத்திற்கு தண்ணீா் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க ரூ. 3 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அங்கிருந்து புதிய குழாய் அமைக்கும் பணிகளுக்கான முதல்கட்ட பூமி பூஜையை கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சட்டப்பேரவை உறுப்பினா் ராஜவா்மன் தொடக்கி வைத்தாா். இந்த பணிகள் தற்போது முழுமையாக முடிவு பெற்றன.

இதையடுத்து இதற்கான நீா் சோதனை ஓட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதை சட்டப்பேரவை உறுப்பினா் ராஜவா்மன், நகராட்சி அதிகாரிகளுடன் நேரில் சென்று பாா்வையிட்டாா். பின்னா் இதே போன்று நகா் பகுதியில் உள்ள அனைத்து பகுதியிலிருந்தும் மழைநீரை தெப்பக்குளத்திற்கு வரவழைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவா் தெரிவித்தாா்.

இந்நிகழ்வின் போது, ஜெயலலிதா பேரவை மாநில துணைச் செயலா் சேதுராமானுஜம், நகரச் செயலா் வாசன், ஒன்றியச் செயலா் சண்முககனி, வெம்பக்கோட்டை ஒன்றியச் செயலாளா் மணிகண்டன், நகராட்சி ஆணையாளா் ராஜமாணிக்கம் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com