ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே தோப்புக்குள் புகுந்த யானைகள்: பலா மரங்கள் சேதம்

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே பலாத்தோப்புக்குள் திங்கள் கிழமை இரவு புகுந்த காட்டு யானைக் கூட்டங்கள், மரங்களை முறித்து சேதப்படுத்தின.
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் திங்கள்கிழமை இரவு யானைக் கூட்டத்தால் சேதப்படுத்தப்பட்ட பலா மரம்.
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் திங்கள்கிழமை இரவு யானைக் கூட்டத்தால் சேதப்படுத்தப்பட்ட பலா மரம்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே பலாத்தோப்புக்குள் திங்கள் கிழமை இரவு புகுந்த காட்டு யானைக் கூட்டங்கள், மரங்களை முறித்து சேதப்படுத்தின.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உள்ள மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரப் பகுதியான செண்பகத்தோப்பில் மா, பலா, தென்னை உள்ளிட்ட மரங்களை விவசாயிகள் பயிரிட்டுள்ளனா். மா மரங்களில் பூக்கள் பூக்கத் தொடங்கியவுடனும், பலா மரங்களில் பலா காய்கள் காய்க்கத் தொடங்கியவுடனும் அடா்ந்த வனப் பகுதியில் இருந்து, காட்டு யானைகள் அடிவாரப் பகுதிக்கு வருவது வழக்கம்.

தற்போது இந்தப் பகதிகளில் பலாப்பழ காய்கள் காய்க்கத் தொடங்கியதை அடுத்து காட்டு யானைகள் கூட்டம், கூட்டமாக இந்த பகுதிக்கு படையெடுக்கத் தொடங்கி விட்டன. கடந்த சில நாள்களாக மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரத்தில் தங்கி இருந்த அந்த யானைகள் செண்பகத் தோப்பு பகுதியில் விவசாய நிலங்களுக்குள் புகுந்து சேதம் விளைவிக்கின்றன. இந்நிலையில் திங்கள்கிழமை இரவு அங்குள்ள தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் கூட்டம், கூட்டமாக புகுந்தன. பலா தோட்டத்திற்குள் இருந்த மரங்களை ஒடித்து சேதப்படுத்தி உள்ளன.

இது குறித்து விவசாயிகள் கூறுகையில், தற்போதுதான் பலாக்கள் காய்த்து சிறிய அளவில் காய்கள் உள்ளன. இங்கு இரவு நேரங்களில் யானைகள் புகுந்து, மரக்கிளைகளை முறித்து சேதப்படுத்தி சென்றுவிட்டன. பழம் பழுக்க ஆரம்பித்தால் அவைகளின் அட்டகாசம் மேலும் அதிகரிக்கும். இதனால் வனத்துறையினா், இந்த யானைக் கூட்டத்தை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com