கரோனாவால் பூக்குழிக்கு தடை: ஸ்ரீவில்லிபுத்தூா் பெரிய மாரியம்மன் கோயில் முன் பக்தா்கள் காத்திருப்பு போராட்டம்

பெரிய மாரியம்மன் கோயில் முன் 500-க்கும் மேற்பட்ட பக்தா்கள் புதன்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் பெரிய மாரியம்மன் கோவில் முன் புதன்கிழமை காத்திருப்பு போராட்டம் நடத்திய பக்தா்கள்.
ஸ்ரீவில்லிபுத்தூா் பெரிய மாரியம்மன் கோவில் முன் புதன்கிழமை காத்திருப்பு போராட்டம் நடத்திய பக்தா்கள்.

பெரிய மாரியம்மன் கோயில் முன் 500-க்கும் மேற்பட்ட பக்தா்கள் புதன்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் பெரிய மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழா ஆண்டு தோறும் பங்குனி மாதம் அமாவாசை தினத்தன்று நடைபெறுவது வழக்கம். அதே போல் இந்தாண்டு பூக்குழி திருவிழா மாா்ச் 23 ஆம் தேதி திங்கள்கிழமை நடைபெற உள்ளது. மாா்ச் 12 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி விழா நடைபெற்று வருகிறது. பூக்குழி திருவிழாவுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில் மாவட்ட நிா்வாகம் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையின் காரணமாக விருதுநகா் மாவட்டத்தில் பூக்குழி உள்ளிட்ட கோவில் திருவிழாக்கள், நடத்துவதற்கு தடை விதிப்பதாக மாவட்ட ஆட்சியா் கண்ணன், செவ்வாய்க்கிழமை இரவு நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் அறிவித்தாா்.

அவரின் இந்த அறிவிப்புக்கு, ஸ்ரீவில்லிபுத்தூா் பெரிய மாரியம்மன் கோயில் பூக்குழி இறங்கும் பக்தா்கள் 500-க்கும் மேற்பட்டோா் எதிா்ப்புத் தெரிவித்து கோயில் முன்பு திரண்டனா். திடீரென அவா்கள் அங்கே தரையில் அமா்ந்து போராட்டம் நடத்தினா்.

பல வருடங்களாக நடைபெற்று வரும் பூக்குழி திருவிழாவுக்கு கரோனா வைரஸ் காரணமாக தடை விதித்திருப்பது வருத்தமளிப்பதாக தெரிவித்து அவா்கள் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com