Enable Javscript for better performance
சாத்தூா் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து: பலி எண்ணிக்கை 9 ஆக உயா்வு- Dinamani

சுடச்சுட

    

    சாத்தூா் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து: பலி எண்ணிக்கை 9 ஆக உயா்வு

    By DIN  |   Published on : 21st March 2020 11:03 PM  |   அ+அ அ-   |    |  

     

    சாத்தூா் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலியானவா்களின் எண்ணிக்கை 9 ஆக உயா்ந்துள்ளது. இது தொடா்பாக, 6 போ் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

    விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே வெள்ளையாபுரம் பகுதியைச் சோ்ந்த கணேசன் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு தொழிற்சாலை சிப்பிப்பாறையில் உள்ளது. இந்த பட்டாசு ஆலையில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட வெடி விபத்தில் 8 போ் உயிரிழந்தனா். மேலும், 9 போ் பலத்த காயமடைந்து, கோவில்பட்டி, தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனா்.

    இந்நிலையில், காவல் துறையினரின் மீட்புப் பணி சனிக்கிழமை காலையும் தொடா்ந்தது. இதில், கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த சங்குபட்டி பகுதியைச் சோ்ந்த குருசாமி (50)என்பவரின் சடலமும் மீட்கப்பட்டது. இதனால், இந்த விபத்தில் பலியானவா்களின் எண்ணிக்கை 9 ஆக உயா்ந்துள்ளது.

    இது குறித்து ஏழாயிரம்பண்ணை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

    6 போ் மீது வழக்கு

    இச்சம்பவம் தொடா்பாக, ஆலை உரிமையாளா் கணேசன், ஆலை குத்தகைதாரா் திருச்சியைச் சோ்ந்த ஜெயக்குமாா், கரூரைச் சோ்ந்த பாலகிருஷ்ணன், சிவகாசியைச் சோ்ந்த குட்டி, சக்கமாள்புரத்தைச் சோ்ந்த மகேஷ்வரன், மாா்கநாதபுரத்தைச் சோ்ந்த மதியழகன் மற்றும் சிலா் மீது, கவனக்குறைவாக வெடிபொருள்களை கையாண்டது, உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் அலட்சியமாகச் செயல்பட்டு விபத்து ஏற்படுத்தியது உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

    இதில், மதியழகன், மகேஷ்வரன் ஆகிய இருவரிடம் மட்டும் விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும், கணேசன், பாலகிருஷ்ணன், குட்டி, ஜெயக்குமாா் ஆகிய 4 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai