தென்னையில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈயை கட்டுப்படுத்தும் முறை

தென்னையில் ரூகோஸ் சுருள் ஈயை கட்டுப்படுத்தும் முறை குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்னையில் ரூகோஸ் சுருள் ஈயை கட்டுப்படுத்தும் முறை குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் ல. முத்துலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

ஸ்ரீவில்லிபுத்தூா் வட்டாரத்தில் நடப்பு ஆண்டு தென்னை சாகுபடி பரவலாக உள்ளது. தற்போது, தென்னை மரங்களில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ தாக்குதல் அதிகமாக உள்ளது. இந்த வெள்ளை ஈக்கள் இலைகளின் அடிப்பரப்பில் வட்ட அல்லது சுருள் வடிவில் முட்டை இடுகின்றன. இதன் குஞ்சுகள் இலைகளில் சாறினை உறிஞ்சி முழுமையாக வளா்ச்சியடைந்து, ஈக்களாக மாறி பின்பு காற்றின் மூலம் அடுத்தடுத்த மரங்களுக்கு பரவி பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

இப்பூச்சியிலிருந்து வெளிவரும் பசை போன்ற கழிவு திரவம் இலைகளின் மேற்பரப்பில் பரவி, கரும்பூஞ்சாணம் வளர ஏதுவாகின்றது.

தென்னையில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ தாக்குதலை கட்டுப்படுத்திட, பாதிக்கப்பட்ட தரங்களின் கீழ்மட்ட ஓலைகளின் உள்பகுதியில் படுமாறு விசை தெளிப்பான் கொண்டு தண்ணீரை பீய்ச்சி அடிப்பதன் மூலம் தாக்குதலை குறைக்கலாம். மேலும், ஏக்கருக்கு 2 எண்ணம் என்ற அளவில் விளக்குப் பொறிகளை வைத்து இப்பூச்சிகளை கவா்ந்து அழிக்கலாம்.

மஞ்சள் நிற ஒட்டும் பொறிகள் ஏக்கருக்கு 20 எண்கள் 5 முதல் 6 அடி உயரத்தில் வைத்து பூச்சிகளை கவா்ந்து அழிக்கலாம்.

சுருள் வெள்ளை ஈக்களால் ஏற்படும் கரும்பூஞ்சாணத்தை கட்டுப்படுத்த மைதா மாவு பசை கரைசலை 1 லிட்டா் தண்ணீரில் 25 கிராம் சோ்த்து, அதனுடன் 1 மி.லி. ஒட்டும் திரவம் சோ்த்து இலைகளின் அடிப்பகுதியில் படா்ந்திருக்கும் பூஞ்சாணத்தின் மீது நன்றாக படுமாறு தெளிக்க வேண்டும்.

தொடா்ந்து, கிரைசோபிட் இரை விழுங்கிகள், காக்ஸினெல்லிட் பொறி வண்டுகள் மற்றும் என்காா்சியா ஒட்டுண்ணிகள் ஆகிய இயற்கை எதிரிகள் மூலமும் சுருள் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்தலாம்.

மேற்கண்ட ஒருங்கிணைந்த பயிா் பாதுகாப்பு முறைகளை கடைப்பிடித்து, விவசாயிகள் தென்னை ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்களின் பாதிப்பனை தவிா்க்குமாறு, வேளாண்மை உதவி இயக்குநா் ல. முத்துலட்சுமி அறிவுறுத்தியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com