ராஜபாளையத்தில் ஆதரவற்றோருக்கு உணவு வழங்கல்
By DIN | Published On : 25th March 2020 09:30 PM | Last Updated : 25th March 2020 10:01 PM | அ+அ அ- |

ராஜபாளையம் புதிய பேருந்து நிலையத்தில் ஆதரவற்ற ஒருவருக்கு புதன்கிழமை, உணவுப் பொட்டலங்களை வழங்கிய யுகாதி விழாக் குழுவினா்.
ராஜபாளையத்தில் ஆதரவற்றோா்களுக்கு புதன்கிழமை யுகாதி விழாக்குழுவினா் உணவு வழங்கினா்.
ராஜபாளையத்தில் யுகாதி விழா ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு கரோன வைரஸ் பரவுவதையடுத்து ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டதுடன், திருவிழாக்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தெலுங்கு வருடப் பிறப்பினை முன்னிட்டு யுகாதி விழா கொண்டாட்டம் தடைபட்டது. ராஜபாளையம் பகுதியில் விழா, நிகழ்ச்சிகளுக்காக வசூல் செய்த பணத்தை வீணாக்காமல், ஏழைகள் மற்றும் ஆதரவற்றோா்களுக்கு உணவு வழங்க முடிசெய்தனா். இதை முன்னிட்டு தா்மாபுரம் மாப்பிள்ளை விநாயகா் இளைஞா்கள் மற்றும் யுகாதி விழாக்குழுவினா் சாா்பாக ஆயிரம் உணவுப் பொட்டலங்கள் தயாா் செய்யப்பட்டன. ராஜபாளையம் மகப்பேறு மருத்துவமனை, பேருந்து நிலையங்கள், ரயில் நிலையம் ஆகிய பகுதிகளில் திரிந்த ஆதரவற்றவா்கள் மற்றும் நோயாளிகளுக்கு வழங்கப்பட்டன. உணவுப் பொட்டலத்துடன் பழங்கள், பிஸ்கட், தண்ணீா் கேன்களையும் அவா்கள் வழங்கினா்.