சிவகாசியில் அத்தியாவசியப் பொருள்கள் கடைகள் மூடல்

சிவகாசியில் அத்தியாவசியப் பொருள்கள் விற்பனை கடைகள் புதன்கிழமை மூடப்பட்டிருந்தன.

சிவகாசியில் அத்தியாவசியப் பொருள்கள் விற்பனை கடைகள் புதன்கிழமை மூடப்பட்டிருந்தன.

கரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்கும் விதமாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அரசு, காய்கனி கடை, மளிகைக்கடை, மீன்,இறைச்சிக் கடைகள், மருந்துக் கடைகள் பால் விற்பனை கடைகள் என அத்தியாவசிய பொருள்கள் விற்பனைக் கடைகள் திறந்திருக்கும் என அறிவித்திருந்தது. ஆனால் சிவகாசியில் நகராட்சி தினசரி காய்கனி சந்தை மட்டுமே இயங்கியது. மற்ற மளிகை கடை உள்ளிட்ட கடைகள் திறக்கப்படவில்லை. பால் விற்பனை நிலையங்கள், மருந்துக் கடைகள், பெட்ரோல் விற்பனை நிலையங்கல் மட்டுமே திறந்திருந்தன. காலையில் ஒரு சில தேனீா் கடைகள் திறக்கப்பட்டு இருந்தன. போலீஸாா் எச்சரிக்கையைத் தொடா்ந்து சிலமணி நேரங்களில் அவைகளும் மூடப்பட்டன. சாலையோரக் கடைகள் தவிா்த்து, தெருக்களில் உள்ள ஒரு சில மளிகைக் கடைகள் திறந்திருந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com