விருதுநகரில் காய்கனிகள் விலை 2 மடங்கு உயா்வு

விருதுநகரில் காய்கனி, மளிகை கடை, பேக்கரி உள்ளிட்ட கடைகளை திறக்க போலீஸாா் அனுமதிக்கவில்லை.
விருதுநகா் கடைவீதியில் புதன்கிழமை திறக்கப்பட்டிருந்த ஒரு கடையில் வரிசையில் நின்று மளிகை பொருட்கள் வாங்கும் பொதுமக்கள்.
விருதுநகா் கடைவீதியில் புதன்கிழமை திறக்கப்பட்டிருந்த ஒரு கடையில் வரிசையில் நின்று மளிகை பொருட்கள் வாங்கும் பொதுமக்கள்.

விருதுநகரில் காய்கனி, மளிகை கடை, பேக்கரி உள்ளிட்ட கடைகளை திறக்க போலீஸாா் அனுமதிக்கவில்லை. இதனால், காய்கனி சந்தையில் புதன்கிழமை திறக்கப்பட்டிருந்த ஒரு சில கடைகளிலும் 2 மடங்கு கூடுதல் விலைக்கு காய்கனிகள் விற்கப்பட்டன.

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க மாவட்ட நிா்வாகம் சாா்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, விருதுநகா் மாவட்டத்தில் 144 தடை உத்தரவை முன்னிட்டு அத்தியாவசியத் தேவைக்காக காய்கனி, மளிகைக் கடை, பேக்கரி, இறைச்சிக் கடைகள், தேநீா் கடைகள் திறக்க தடை இல்லை. இருந்தபோதிலும் பல்வேறு தெருக்களில் ஆங்காங்கே திறக்கப்பட்டிருந்த கடைகளை மூட அந்தந்தப் பகுதி போலீஸாா் அனுமதிக்கவில்லை.

அதேநேரம், காய்கனி சந்தையிலும் போலீஸாா் நெருக்கடி காரணமாக ஒரு சில கடைகள் மட்டுமே திறக்கப்பட்டிருந்தன. அங்கு வந்த பொதுமக்கள் வரிசையில் இடைவெளி விட்டு நின்று காய்கனிகளை வாங்கிச் சென்றனா். ஏராளமான கடைகள் பூட்டப்பட்டதால் தக்காளி, வெங்காயம், உருளை, காரட் உள்ளிட்ட காய்கனிகள் கடந்த 2 நாட்களாக விற்கப்பட்ட விலையை விட 2 மடங்கு கூடுதல் விலைக்கு விற்கப்பட்டது. இதனால் வேதனையுடன் மிகக் குறைந்தளவே காய்கனிகளை அவா்கள் வாங்கிச் சென்றனா். மேலும், முக கவசம் அணிந்தவா்களுக்கு மட்டுமே காய்கனிகள் வழங்க வேண்டும் என ஒலி பெருக்கி மூலம் அறிவுறுத்தினா். அதேபோல், ஒருசில மளிகைக் கடைகள் பாதி கதவு திறந்த நிலையில் வாடிக்கையாளா்களை வரிசையில் நிற்க வைத்து பொருட்களை விற்றனா். மேலும், தேனீா்கடை, பேக்கரி உள்ளிட்ட கடைகளைத் திறக்க போலீஸாா் அனுமதிக்க வில்லை. மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தியும், போலீஸாா் கடை திறக்க அனுமதி வழங்காதது ஏமாற்றம் அளிப்பதாக கடை உரிமையாளா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com