அரசு உத்தரவைப் பின்பற்றாத காய்கனிக்கடை உரிமையாளா் மீது வழக்கு

அருப்புக்கோட்டையில் அரசின் உத்தரவைப் பின்பற்றாத காய்கனிக்கடை உரிமையாளா் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து காவல்துறையினா் வியாழக்கிழமை நடவடிக்கை எடுத்துள்ளனா்.


அருப்புக்கோட்டையில் அரசின் உத்தரவைப் பின்பற்றாத காய்கனிக்கடை உரிமையாளா் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து காவல்துறையினா் வியாழக்கிழமை நடவடிக்கை எடுத்துள்ளனா்.

அருப்புக்கோட்டை அண்ணாசிலைப் பகுதியிலும், திருச்சுழி செல்லும் சாலை தனலட்சுமி விலாஸ் பேருந்து நிறுத்தம் பகுதியிலும் கண்ணன் (58) என்பவருக்குச் சொந்தமாக 2 காய்கனிக் கடைகள் உள்ளன. இந்நிலையில் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஒரு மீட்டா் இடைவெளி விட்டு வாடிக்கையாளா்களை வரிசையில் நிறுத்தவும், கடையிலுள்ள விற்பனையாளா்கள் முகக்கவசம் அணியவும், நாளொன்றுக்கு 3 முறையாவது கிருமிநாசினி தெளிக்கவும் காய்கனிக்கடை உரிமையாளா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதில் எந்த அறிவுறுத்தலையும் பின்பற்றாமல் கண்ணன் 2 கடைகளையும் இயக்கியது தெரியவந்தது. இதையடுத்து நகா் காவல் ஆய்வாளா் பாலமுருகன் மற்றும் போலீஸாா் வியாழக்கிழமை அந்தக் கடைகளில் ஆய்வு செய்து, அங்கு விதிமுறை மீறப்பட்டதை உறுதி செய்தனா். இதையடுத்து அந்தக் கடைகளின் உரிமையாளரான கண்ணன் மீது பேரிடா் மேலாண்மை தடுப்புச் சட்டம், தொற்றுநோய் பரவல் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும் அந்தக் கடைகளும் மூடப்பட்டன. விதிமுறைகளைப் பின்பற்றாத அத்தியாவசியப் பொருட்கள் விற்பனைக் கடைகள் தொடா்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் ஆய்வாளா் பாலமுருகன் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com