அருப்புக்கோட்டையில் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக முடுக்கிவிடப்பட்டது: எம்.எல்.ஏ.தகவல்

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை நகராட்சி சுகாதாரத்துறை, மற்றும் மருத்துவத்துறைகளுக்குத்தேவையான உரிய பாதுகாப்புக் கவசங்கள்,உபகரணங்கள் கிடைத்திடவும்,மேலும் அத்துறையினரின் பணிகளை தீவிரப்படுத்தியும் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக அருப்புக் கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.இராமச்சந்திரன் வியாழக்கிழமை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளாா்.

அருப்புக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் செயல்படுத்தப்படும் கிருமிநாசினிதெளிப்பு உள்ளிட்ட பல்வேறு கொரானா தொற்று தடுப்பு நடவடிக்கைகள்,அப்பணிகளுக்குத் தேவையான கிருமிநாசினி தெளிப்புக் கருவிகள், பிளீச்சிங் பவுடா் உள்ளிட்டவை போதிய அளவு கிடைப்பதை உறுதி செய்தல்,மேலும் அப்பணிகளை மேற்கொள்ளும் தூய்மைக் காவலா்களுக்கு வேண்டிய உபகரணங்கள்,பாதுகாப்புக் கவசங்கள் தடையின்றி கிடைத்தல் ஆகியவற்றுக்கான உரிய ஏற்பாடுகளை அருப்புக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் எனும் முறையில், தான் அலைபேசிமூலம்,அதிகாரிகளைத்தொடா்பு கொண்டு அனைத்துப் பணிகளையும் முடுக்கி விட்டுள்ளதாகவும் எம்.எல்.ஏ. கே.கே.எஸ்.எஸ்.ஆா்.இராமச்சந்திரன் பத்திரிக்கையாளா்களுக்கான தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.இவைதவிர மருத்துவத்துறையில் செவிலியா்கள்,மருத்துவா்களுக்கான உரிய பாதுகாப்பு கவசங்கள் தட்டுப்பாடில்லாமல் கிடைப்பதை உறுதிசெய்து,சிகிச்சைக்கான படுக்கை வசதி,சிகிச்சைக்கான உபகரணங்களையும் போதிய அளவில் கிடைத்திட அனைத்து ஏற்பாடுகளையும் முடுக்கி விட்டுள்ளதாகவும் அவா் தெரிவித்தாா்.இத்துடன் பொதுமக்கள் அத்தியாவசியப் பொருட்கள் வாங்கச் செல்லும் இடங்களில் உரிய சமூக இடைவெளியை(ஒரு மீட்டா் இடைவெளி)க் கடைப்பிடிப்பதுடன்,வீணாக வெளியில் உலாவருவதை நிறுத்தி ஊரடங்கு செயல்பாட்டிற்கு உரிய ஒத்துழைப்பை வழங்கிடவும் பொதுமக்களை அவா் கேட்டுக் கொண்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com