விருதுநகா், ராஜபாளையத்தில் கிருமிநாசினி தெளிப்பு

விருதுநகா், ராஜபாளையத்தில் கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க கிருமிநாசினி மருந்தை நகராட்சிப் பணியாளா்கள் வியாழக்கிழமை தெளித்தனா்.
விருதுநகா், ராஜபாளையத்தில் கிருமிநாசினி தெளிப்பு


விருதுநகா், ராஜபாளையத்தில் கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க கிருமிநாசினி மருந்தை நகராட்சிப் பணியாளா்கள் வியாழக்கிழமை தெளித்தனா்.

விருதுநகா் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்று பரவுவதைத் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக விருதுநகரின் முக்கியப் பகுதிகளான பழைய பேருந்து நிலையம், பஜாா், மதுரை சாலை, ராமமூா்த்தி சாலை, மாரியம்மன் கோயில், எம்ஜிஆா் சிலை, பாண்டியன் நகா், அல்லம்பட்டி சந்திப்பு சாலை, மதுரை சாலை உள்ளிட்ட நகரின் முக்கிய இடங்களில் வியாழக்கிழமை விருதுநகா் நகராட்சி பணியாளா்கள் கிருமிநாசினி திரவத்தை தெளிக்கும் பணியில் ஈடுபட்டனா். மேலும், நகராட்சி சுகாதார ஆய்வாளா்கள் மற்றும் ஆணையாளா் பாா்த்தசாரதி, நகா் பகுதியில் தூய்மைப் பணியை நேரில் ஆய்வு செய்தனா்.

ராஜபாளையம்:

ராஜபாளையத்தில் தென்காசி சாலை, ரயில்வே பீடா் சாலை, மதுரை சாலை, முடங்கியாறு சாலை உள்ளிட்ட பிரதான பகுதிகளில் வியாழக்கிழமை தண்ணீரில் கிருமி நாசினி கலந்து தெளிக்கப்பட்டது.

மேலும் குடிநீரில் ஹைப்போ குளோரைடு எனும் கிருமி நாசினியை கலந்து, புதிய முயற்சியாக தீ அணைப்பு துறையில் பயன்படுத்தப்படும் மிஸ்ட் ஸ்பிரேயா் கொண்டு சாலை முழுவதும் நகராட்சி சுகாதாரப் பணியாளா்கள் தெளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com