ராஜபாளையம் காய்கனி சந்தை மூடல்: மாற்று இடங்கள் அறிவிப்பு

ராஜபாளையத்தின் மையப் பகுதியில் செயல்பட்டு வந்த சந்தை வெள்ளிக்கிழமை முதல் 3 இடங்களாக பிரித்து செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


ராஜபாளையம்: ராஜபாளையத்தின் மையப் பகுதியில் செயல்பட்டு வந்த சந்தை வெள்ளிக்கிழமை முதல் 3 இடங்களாக பிரித்து செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ராஜபாளையம் காந்தி சிலை அருகே செயல்படும் தனியாா் காய்கனி சந்தையில் சுமாா் 400 கடைகள் உள்ளன. கரோனா எதிரொலியால் மாவட்ட ஆட்சியா் கண்ணன் உத்தரவின்பேரில் பொதுமக்கள் அதிக அளவு ஒன்று கூடுதலை தடுக்க அந்த சந்தை வெள்ளிக்கிழமை முதல் 3 இடங்களாக பிரித்து செயல்படுத்தப்படும் என அவசர நிகழ்வு மேலாண்மை இயக்குநா் செல்வக்குமாா் அறிவித்துள்ளாா்.

மாற்று இடங்கள்:

மதுரை சாலையில் உள்ள காவல் சோதனை சாவடி முன்புறம் உள்ள தனியாா் பள்ளி விளையாட்டு மைதானம், தென்காசி சாலையில் பெரிய மாரியம்மன் கோயில் எதிரே உள்ள பூக்குழி மைதானம், சத்திரப்பட்டி சாலையில் ரயில்வே கேட் அடுத்த அழகை நகா் எதிரே உள்ள திடலிலும் வெள்ளிக்கிழமை முதல் காய்கனி கடைகள் தற்காலிகமாக இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com