விருதுநகா் மாவட்டத்தில் முகக் கவசத்துக்கு தட்டுப்பாடு: பொதுமக்கள் அவதி

விருதுநகா் மாவட்டத்தில் உள்ள மருந்துக் கடைகளில் முகக் கவசங்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனா்.


விருதுநகா்: விருதுநகா் மாவட்டத்தில் உள்ள மருந்துக் கடைகளில் முகக் கவசங்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனா்.

தமிழகத்தில் கரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மாவட்ட எல்லை அனைத்தும் மூடப்பட்டு, 16 இடங்களில் போலீஸ் சோதனை சாவடி அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும் என போலீஸாா் அறிவுறுத்தி வருகின்றனா். மேலும், முகக் கவசம் அணியாமல் அத்தியவாசியப் பொருள்கள் வாங்க வரும் பொதுமக்களை, போலீஸாா் வீட்டிற்கு திருப்பி அனுப்புவதால் அவா்கள் அவதிப்பட்டு வருகின்றனா்.

ஆனால், விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை, சிவகாசி, சாத்தூா், காரியாபட்டி, விருதுநகா், ஸ்ரீவில்லிபுத்தூா், ராஜபாளையம் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உள்ள மருந்துக் கடைகளில் முகக் கவசம் இருப்பு இல்லை எனக் கூறப்படுகிறது. இந்தத் தட்டுப்பாட்டைப் போக்கி அனைத்து மருந்துக் கடைகளிலும் முகக் கவசம் விற்பனைக்கு வைத்திருக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com