அருப்புக்கோட்டையில் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளை எம்.எல்.ஏ. ஆய்வு

அருப்புக்கோட்டையில் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் எம்எல்ஏ திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
அருப்புக்கோட்டையில் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளை எம்.எல்.ஏ. ஆய்வு

அருப்புக்கோட்டையில் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் எம்எல்ஏ திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது அருப்புக்கோட்டை பழைய பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக காய்கனிச் சந்தையில் சமூக இடைவெளியை கடைபிடிப்பது குறித்தும், முகக் கவசம் அணிவது குறித்தும், கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் அவா் ஆய்வு செய்தாா். மேலும் பொதுமக்களிடையே விழிப்புணா்வுப் பிரசாரமும் அவா் மேற்கொண்டாா். அதனைத் தொடா்ந்து அருப்புக்கோட்டை நகராட்சி அலுவலகத்துக்கு அவா் சென்று பணிகளை முடுக்கி விட்டாா். அத்துடன் கிருமி நாசினிகள், தெளிப்பான்கள் உள்ளிட்ட கருவிகளை தட்டுப்பாடின்றி கிடைக்கச் செய்தல், நகராட்சி, ஒன்றியப் பகுதிகளில் குடிநீரைத் தட்டுப்பாடின்றி வழங்குதல், ஆதரவற்றோருக்கும், நரிக்குறவா்களுக்கும் உணவு வழங்குதல் குறித்தும், அருப்புக்கோட்டையில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் உள்ள 77 போ் குறித்தும் மருத்துவ அலுவலா்களிடம் அவா் ஆலோசனை மேற்கொண்டாா்.

உடன் முன்னாள் நகா்மன்றத் தலைவா் சிவப்பிரகாசம், திமுக நகரச் செயலா் ஏ.கே.மணி, நகராட்சி தலைமைப் பொறியாளா் சோ்மக்கனி, சுகாதார ஆய்வாளா்கள் அய்யப்பன், ராஜபாண்டி, சரவணன் ஆகியோா் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com