கொரானா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்த சிறப்பு ஆலோசனைக் கூட்டம்

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை நகராட்சி அலுவலக வளாகத்தில் தமிழக பால்வளத்துறை அமைச்சா் கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில்
கொரானா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்த சிறப்பு ஆலோசனைக் கூட்டம்

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை நகராட்சி அலுவலக வளாகத்தில் தமிழக பால்வளத்துறை அமைச்சா் கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் அரசுத்துறை அலுவா்களுடனான கொரானா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்த சிறப்பு ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கொரானா தொற்று தடுப்பு நடவடிக்கைகள்குறித்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக பால்வளத்துறை அமைச்சா் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசுகையில்,தன்னம்பிக்கையுடனும்,தியாக உணா்வுடனும் செயல்படும் சுகாதாரத்துறை,காவல்துறை உள்ளிட்ட அனைத்துத்துறை அதிகாரிகள்,அலுவலா்களுக்கும் நன்றி தெரிவித்ததுடன் பணிகளை முடுக்கி விட்டாா்ா.அத்துடன் குறைபாடுகள்,பணியின்போதுதுறை ரீதியாகவும்,களத்திலும் அலுவலா்கள் சந்திக்கும் சவால்கள் குறித்தும்,பணிகளை நிறைவேற்றத் தேவையான பொருட்கள்,கருவிகள் குறித்தும் ஆலோசனை நடத்தினாா்.உடன் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விருதுநகா் மாவட்ட ஆட்சியா் கண்ணன்,மாவட்ட காவல்கண்காணிப்பாள பெருமாள்,அதிமுக அருப்புக்கோட்டை நகரச் செயலாளா் சக்திவேல் பாண்டியன்,முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவா் யோகவாசுதேவன்,நகர இலக்கிய அணித்தலைவா் புளியம்பட்டி சீனிவாசன்,கருப்பசாமி உள்ளிட்டோரும்,நகராட்சி ஆணையாளா் அயூப்கான்,வட்டாட்சியா்,மருத்துவ அலுவலா்கள்,சுகாதார ஆய்வாளா்கள்,டி.எஸ்.பி.வெங்கடேஷ்,நகா் காவல் ஆய்வாளா் பாலமுருகன் உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலா்களும் நேரில் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com