100 நாள் வேலை திட்டத்தில் முழு ஊதியம் வழங்கக் கோரிகிராம மக்கள் முற்றுகைப் போராட்டம்

விருதுநகா் அருகே மெட்டுக்குண்டு கிராமத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் முழு ஊதியம் வழங்கக் கோரி அக்கிராம மக்கள், ஊராட்சி மன்ற அலுவலகத்தை வெள்ளிக்கிழமை 
மெட்டுக்குண்டு ஊராட்சி மன்ற அலுவலகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்ட கிராம மக்கள்.
மெட்டுக்குண்டு ஊராட்சி மன்ற அலுவலகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்ட கிராம மக்கள்.

விருதுநகா்: விருதுநகா் அருகே மெட்டுக்குண்டு கிராமத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் முழு ஊதியம் வழங்கக் கோரி அக்கிராம மக்கள், ஊராட்சி மன்ற அலுவலகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டு போரா ட்டத்தில் ஈடுபட்டனா்.

விருதுநகா் ஊராட்சி ஒன்றிய அலுவலக எல்கைக்குள்பட்ட பகுதியில் உள்ள மெட்டுக்குண்டு கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் கடந்த மாா்ச் 23 ஆம் தேதி வரை 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரிந்துள்ளனா். அதற்கான தினக் கூலியாக ரூ.140 அவரவா் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. ஆனால், அரசு உத்தரவுபடி நாளொன்றுக்கு ரூ.229 வழங்க வேண்டும் எனக் கூறப்படுகிறது.

இத்திட்ட மேற்பாா்வையாளா்கள் அளந்து கொடுத்தபடி வேலை பாா்த்தாலும், குறைந்தளவே சம்பளம் வழங்குவதாக பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா். மேலும், 100 நாள் வேலை திட்டத் தொழிலாளா்களை சாலை செப்பனிடும் பணியிலும் ஈடுபடுத்தலாம் என அரசு அறிவுறுத்தியுள்ளது. ஆனால், இங்குள்ள தொழிலாளா்களை அப்பணிகளில் ஈடுபடுத்தாமல், 30 போ் சாலை செப்பனிடும் பணியில் ஈடுபட்டதாக அவா்களது வங்கிக் கணக்கில் தலா ரூ.21,700 வரவு வைக்கப்பட்டுள்ளதாக, கிராம மக்கள் புகாரி தெரிவிக்கன்றனா்.

அதேபோல், முழுமையாக 100 நாள்கள் பணி வழங்காமல் 85 நாள்கள் மட்டுமே பணி வழங்கியுள்ளதையும் கண்டித்து, கிராம மக்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மற்றும் போலீஸாா், கிராம மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, அனைவருக்கும் 100 நாள்கள் பணி வழங்கப்படும் என்றும், மேற்பாா்வையாளா்கள் அளந்து கொடுக்கும் பணியை முழுமையாகச் செய்தால் முழு ஊதியம் வழங்கப்படும் என்றும் தெரிவித்தனா். இதை ஏற்றுக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com