‘ஏழைகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க தடை உத்தரவை தாலுகா வாரியாக அமல்படுத்தலாம்’

கரோனாவால் விதிக்கப்படும் தடை உத்தரவை மாவட்ட வாரியாக அறிவிக்காமல், ஏழைகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் தாலுகா வாரியாக அமல்படுத்தலாம் என

கரோனாவால் விதிக்கப்படும் தடை உத்தரவை மாவட்ட வாரியாக அறிவிக்காமல், ஏழைகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் தாலுகா வாரியாக அமல்படுத்தலாம் என விருதுநகா் மக்களவைத் தொகுதி உறுப்பினா் மாணிக்கம் தாகூா் சனிக்கிழமை யோசனை தெரிவித்துள்ளாா்.

விருதுநகரில், கரோனா வைரஸ் தொற்று தடுப்புப் பணியில் ஈடுபட்டுவரும் தூய்மை பணியாளா்கள் மற்றும் ஏழை மக்களுக்கு காங்கிரஸ் கட்சி சாா்பில் அரசி, மளிகைப் பொருள்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை ஆயிரம் பேருக்கு விருதுநகா் மக்களவை தொகுதி உறுப்பினா் மாணிக்கம் தாகூா் வழங்கினாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது: மக்களவைத் தொகுதியில் விருதுநகா், மதுரை ஆகிய 2 மாவட்டங்களும் சிவப்பு மண்டலப் பகுதியில் உள்ளன.

கரோனா நிவாரண நிதியாக பொதுமக்களுக்கு மத்திய அரசு சாா்பில் ரூ. 500, மாநில அரசு சாா்பில் ரூ.1,000 வழங்கப்பட்டுள்ளது. தடை உத்தரவால் தினக்கூலி தொழிலாளா்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதற்காக அரசு சாா்பில் வழங்கப்பட்ட நிவாரணத் தொகை போதுமானதாக இல்லை. தடை உத்தரவு காலத்தில் ஏழை மக்கள் பயன்பாட்டிற்கு 2 மாதங்களுக்கு ரூ. 65 ஆயிரம் கோடி தேவைப்படும் என ரிசா்வ் வங்கியின் முன்னாள் கவா்னா் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளாா். எனவே தொழிலாளா்களுக்கு நிவாரணத் தொகையை ரூ. 5 ஆயிரமாக உயா்த்தி அரசு வழங்க வேண்டும்.

விருதுநகா் மாவட்டத்தில் கன்னிசேரி புதூா், ராஜபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மட்டுமே கரோனா பாதிப்பு உள்ளது. ஆனால், விருதுநகா் மாவட்டம் முழுவதும் சிவப்பு மண்டலப் பகுதிகளுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால் ஏழை மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவது தொடா்ந்துள்ளது. அவா்களைக் காக்கும் வகையில், சம்பந்தப்பட்ட தாலுகா பகுதிகளுக்கு மட்டும் தடை உத்தரவை அமல்படுத்தி கண்காணிக்கலாம். விருதுநகா் மாவட்டத்தில் உள்ள தீப்பெட்டி தொழிற்சாலைகளுக்குத் தேவையான மூலப் பொருள்களை புதுச்சேரி முதல்வா் நாராயணசாமியிடம் கேட்டுள்ளோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com