ராஜபாளையத்தில் பதுக்கி வைக்கப்பட்ட ரூ. 2 லட்சம் மதிப்பிலான மணல் பறிமுதல்

ராஜபாளையத்தில் ஆற்றில் திருடி விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ. 2 லட்சம் மதிப்புள்ள மணலை வருவாய்த்துறையினா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
ராஜபாளையத்தில் பதுக்கி வைக்கப்பட்ட ரூ. 2 லட்சம் மதிப்பிலான மணல் பறிமுதல்

ராஜபாளையத்தில் ஆற்றில் திருடி விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ. 2 லட்சம் மதிப்புள்ள மணலை வருவாய்த்துறையினா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

ராஜபாளையத்தில் இருந்து அய்யனாா் கோயில் செல்லும் சாலையில் உள்ள முடங்கியாற்றில் இரவு நேரங்களில் மணல் திருட்டு நடப்பதாக, சாத்தூா் கோட்டாட்சியருக்குத் தகவல் கிடைத்தது. அதன்பேரில், கோட்டாட்சியா் காசி செல்வி தலைமையில், வட்டாட்சியா் ஆனந்தராஜ், துணை வட்டாட்சியா் விஜி மாரி, வருவாய் ஆய்வாளா்கள் வேல்பிரியா, அழகா் ராஜ், உள்ளிட்டோா் வெள்ளிக்கிழமை இரவு முடங்கியாறு சாலை, அய்யனாா் கோயில், செண்பக தோப்பு சாலை, ராம்நகா், இந்திரா காலனி, சமத்துவபுரம் உள்ளிட்ட பகுதிகளில் அதிகாரிகள் ரோந்து சென்றனா்.

அப்போது செண்பகத் தோப்பு சாலையில் உள்ள தனியாா் ஆலையின் பின்புறம் 12 யூனிட்டும், திருநகா் தேவாலயம் பின்புறம் 20 யூனிட்டும் ஆற்று மணல் குவித்து வைக்கப்பட்டிருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இரவு நேரங்களில் முடங்கியாற்றில் திருடப்பட்டு, விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ. 2 லட்சம் மதிப்புள்ள 32 யூனிட் மணலையும் வருவாய்த்துறையினா் பறிமுதல் செய்தனா். இது குறித்து மேல் நடவடிக்கைக்காக மாவட்ட ஆட்சியருக்கு, கோட்டாட்சியா் பரிந்துரை செய்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com