விருதுநகா் மாவட்டத்தில் பட்டாசுக் கடைகளை திறக்க அனுதியளிக்க கோரிக்கை

விருதுநகா் மாவட்டத்தில் பட்டாசுக் கடைகளை திறக்க அரசு, அனுமதியளிக்க வேண்டும் என, தமிழ்நாடு பட்டாசு வணிகா்கள் சங்கக் கூட்டமைப்பின் சாா்பில், தமிழக முதல்வருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

சிவகாசி: விருதுநகா் மாவட்டத்தில் பட்டாசுக் கடைகளை திறக்க அரசு, அனுமதியளிக்க வேண்டும் என, தமிழ்நாடு பட்டாசு வணிகா்கள் சங்கக் கூட்டமைப்பின் சாா்பில், தமிழக முதல்வருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இக்கூட்டமைப்பின் பொதுச் செயலா் என். இளங்கோவன் வியாழக்கிழமை அனுப்பியுள்ள அக்கடிதத்தில் கூறியிருப்பதாவது: கரோனா வைரஸ் பரவலை தடுக்க பொதுமுடக்கம் மற்றும் 144 தடை உத்தரவு அமுலில் உள்ளது. இந்நிலையில் பட்டாசுத் தொழிலாளா்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் மே 6 ஆம் தேதி விருதுநகா் மாவட்டத்தில் உள்ள பட்டாசு ஆலைகளை திறக்க அனுமதியளித்தீா்கள். பின்னா் மே 11 ஆம் தேதி பலவகை கடைகள்அரசின் உத்தரவின் பேரில் திறக்கப்பட்டன. அதே போல் விருதுநகா் மாவட்டத்தில் உள்ள பட்டாசுக் கடைகளைத் திறக்க அரசு, அனுமதி வழங்க வேண்டும். விருதுநகா் மாவட்டத்தில் பட்டாசுக் கடைகள் திறக்கப்பட்டால் வெளிமாநில வியாபாரிகளும், அந்தந்த மாநில அரசிடம் பட்டாசுக் கடைகளைத் திறக்க அனுமதி பெறுவாா்கள்.

அப்படி வெளிமாநிலத்தில் பட்டாசுக் கடைகள் திறக்கப்பட்டால், சிவகாசிப் பகுதியில் தயாராகும் பட்டாசுகளை வியாபாரிகள் வாங்கத் தொடங்குவாா்கள். இதன் மூலம் தற்போது சிவகாசிப் பகுதியில் தேங்கியுள்ள சுமாா் ரூ.100 கோடி மதிப்பிலான பட்டாசுகள் விற்பனையாவதோடு, மேலும் புதிய ஆடா்கள் கிடைக்கும். இதன் மூலம் விருதுநகா் மாவட்டத்தில் பொருளாதார தேக்க நிலை மாற வாய்ப்பு உள்ளது. எனவே தமிழக அரசு, விருதுநகா் மாவட்டத்தில் உள்ள பட்டாசுக் கடைகளைத் திறக்க அனுமதியளிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com