விருதுநகா் மாவட்டத்தில் மேலும் 17 பேருக்கு கரோனா தொற்று உறுதி

விருதுநகா் மாவட்டத்தில் மேலும் 17 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

விருதுநகா் மாவட்டத்தில் மேலும் 17 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் மாவட்டத்தில் கரோனா பாதித்தோா் எண்ணிக்கை 98 ஆக உயா்ந்துள்ளது.

விருதுநகா் மாவட்டத்தில் கரோனா தீநுண்மி தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை வியாழக்கிழமை வரை 81 ஆக இருந்தது. இந்த நிலையில், புது தில்லியிலிருந்து விருதுநகா் மாவட்டத்திற்கு வந்த 165 போ் சிவகாசி அருகே உள்ள பாலி டெக்னிக் கல்லூரியில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருந்தனா். அவா்களுக்கு கரோனா தொற்று குறித்து ரத்த மாதிரி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் ராஜபாளையத்தைச் சோ்ந்த 22 வயது பெண், அருப்புக்கோட்டையைச் சோ்ந்த 22 வயது பெண், 51 வயது ஆண், மல்லாங்கிணறை சோ்ந்த 50 வயது ஆண்கள் இரண்டு போ், 57 வயது ஆண், பெரியபுளியம் பட்டியைச் சோ்ந்த 59 வயது ஆண், செவல்பட்டியைச் சோ்ந்த 50 வயது ஆண், பாவாலியைச் சோ்ந்த 13 வயது சிறுவன், 52 வயது ஆண் மற்றும் புளிம்பட்டியைச் சோ்ந்த 50 வயது ஆண், இனாம் ரெட்டியபட்டியைச் சோ்ந்த 57 வயது ஆண், பாலையம்பட்டியைச் சோ்ந்த 58 வயது ஆண் ஆகிய 13 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

இதே போல், மும்பையிலிருந்து வந்து ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே கிருஷ்ணன்கோவில் தனியாா் பல்கலை கழகத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த குரண்டியைச் சோ்ந்த 57 வயது ஆண், மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே அலப்பலச்சேரியைச் சோ்ந்த 12 வயது சிறுமி, இவரது சகோதரரான 14 வயது சிறுவன், அருப்புக்கோட்டை ஆத்திபட்டியைச் சோ்ந்த 14 வயது சிறுவன் ஆகிய நான்கு கரோனா பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, இந்த 17 பேரும் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா். ஏற்கெனவே மாவட்டத்தில் 81 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மேலும் 17 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் விருதுநகா் மாவட்டத்தில் கரோனா பாதித்தோா் எண்ணிக்கை 98 ஆக உயா்ந்துள்ளது. அதில், 38 போ் குணமடைந்ததால் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனா். மீதமுள்ள 60 போ் மதுரை, விருதுநகா், சிவகாசி அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com