ராஜபாளையம் அருகே நாட்டு வெடிகுண்டு வைத்திருந்த இருவர் கைது

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே வனவிலங்குகளை வேட்டையாட முயன்ற இருவரை நாட்டு வெடிகுண்டுகளுடன் வனத்துறையினர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
ராஜபாளையம் அருகே நாட்டு வெடிகுண்டு வைத்திருந்த இருவர் கைது

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே வனவிலங்குகளை வேட்டையாட முயன்ற இருவரை நாட்டு வெடிகுண்டுகளுடன் வனத்துறையினர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

ராஜபாளையம் அருகே  சேத்தூர் பிராவடியாறு பீட் வனப்பகுதியில் உள்ள பட்டா நிலத்தில் வனவிலங்குகளை வேட்டையாடுவதாக வனத் துறையினருக்கு வந்த ரகசிய தகவலையடுத்து வனச்சரக அலுவலர் சுப்பிரமணியன்,வனவர் குருசாமி தலைமையில் வனத்துறையினர்  ஞாயிற்றுக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சுந்தரராஜபுரம் பகுதியைச் சேர்ந்த  தனியார் பட்டா நிலத்தில் இரண்டு பேர் தங்கியிருந்தனர். 

சந்தேகப்படும்படியாக இருந்த இருவரிடம் விசாரணை செய்ததில் பட்டா நிலத்தில் பத்து இடங்களில் மாம்பழம், கொய்யாப்பழத்தில் மறைத்து நாட்டு வெடிகுண்டுகளை புதைத்து வைத்து வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக வைத்தது தெரியவந்தது. அவர்களிடமிருந்து அரிவாள், கத்தி 10 நாட்டு வெடிகுண்டுகளை வனத்துறையினர் கைப்பற்றினர். 

விசாரணையில் சுந்தர்ராஜபுரத்தை சேர்ந்த குருவேந்திரன் என்பவரது மகன் மனோஜ்குமார்( 20), சமுத்திரம் என்பவரது மகன் சதீஷ்கர்( 21) என தெரிய வந்தது. இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருவதாகவும் தற்போது ஊரடங்கால் சொந்த ஊருக்கு வந்துள்ளார். அவர்கள் வைத்திருந்த 10 நாட்டு வெடிகுண்டுகள் மற்றும் அறிவாள் ஆகிவற்றை பறிமுதல் செய்து
வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com