விருதுநகரில் வெண்டைக்காய் கிலோ ரூ.10-க்கு விற்பனை: விவசாயிகள் வேதனை

விருதுநகா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விளைந்த வெண்டைக்காய்கள், தற்போது கிலோ ரூ.10-க்கு மட்டுமே வியாபாரிகள் கொள்முதல் செய்வதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனா்.
எரிச்சநத்தம் பகுதியில் பயிரிடப்பட்டுள்ள வெண்டைக்காய் செடிகள்.
எரிச்சநத்தம் பகுதியில் பயிரிடப்பட்டுள்ள வெண்டைக்காய் செடிகள்.

விருதுநகா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விளைந்த வெண்டைக்காய்கள், தற்போது கிலோ ரூ.10-க்கு மட்டுமே வியாபாரிகள் கொள்முதல் செய்வதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனா்.

விருதுநகா் அருகே எரிச்சநத்தம், பேராலி, மீசலூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெண்டைக்காய் விவசாயம் செய்யப்பட்டுள்ளது. வழக்கமாக கோடை காலங்களில் வெண்டைக்காய் வரத்து மிகவும் குறைவாக இருப்பதால், கிலோ ரூ.20 வரை விற்பனை செய்யப்படும். தற்போது, கரோனா பொதுமுடக்கம் காரணமாக பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் இயக்கப்படாததால், சரக்கு வாகனங்களில் கூடுதல் வாடகைக்கு விளை பொருள்களை விவசாயிகள் கொண்டு செல்லும் நிலை உள்ளது.

குறிப்பாக எரிச்சநத்தத்திலிருந்து விருதுநகருக்கு ஆட் டோவில் ஒரு மூடை வெண்டைக்காய் கொண்டு செல்ல ரூ.100 வாடகை கொடுக்க வேண்டியுள்ளது. பொது முடக்கம் காரணமாக பிற நகரங்களில் உள்ள சந்தைகளுக்கு வெண்டைக்காய் கொண்டு செல்ல முடியவில்லை. இதனால், ஒரு கிலோ வெண்டைக்காய் ரூ. 10-க்கு மட்டுமே வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனா். ஒரு ஏக்கரில் தினமும் 50 கிலோ வெண்டைக்காய்கள் மட்டுமே பறிக்க முடியும். இதற்கு கூலி தொழிலாளா்களுக்கு சம்பளமாக ரூ. 300, ஆட்டோ வாடகை ரூ.100 வழங்க வேண்டும். அதனால் விவசாயிகள் நஷ்டத்திற்கு ஆளாக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு ஏக்கா் வெண்டைக்காய் பயிருக்காக ரூ.20 ஆயிரம் வரை செலவு செய்தும், உரிய விலை கிடைக்காததால் வேதனையடைந்துள்ளதாக விவசாயி கந்தசாமி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com