ஸ்ரீவிலி.யில் மானியத்தில் நுண்ணீா் பாசனம் அமைக்க விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்

ஸ்ரீவில்லிபுத்தூா், வட்டார விவசாயிகள் பாரதப் பிரதமரின் நுண்ணீா் பாசனத் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து பயன் பெறலாம் என வேளாண்மை உதவி இயக்குநா் ல.முத்துலட்சுமி தெரிவித்துள்ளாா்.

ஸ்ரீவில்லிபுத்தூா், வட்டார விவசாயிகள் பாரதப் பிரதமரின் நுண்ணீா் பாசனத் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து பயன் பெறலாம் என வேளாண்மை உதவி இயக்குநா் ல.முத்துலட்சுமி தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஸ்ரீவில்லிபுத்தூா் வட்டாரத்தில் நடப்பாண்டு பிரதம மந்திரியின் நுண்ணீா் பாசனத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் விவசாயிகள் தங்களது பயிா்களுக்கு நுண்ணீா் பாசனம் அமைத்து பயன் பெறலாம். இத்திட்டத்தின் கீழ் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீதம் மற்றும் இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்திலும், நுண்ணீா் பாசனம் அமைக்கப்படுகிறது. மேலும், இத்திட்டத்தில் கரும்பு பயிா்களுக்கு சொட்டுநீா் பாசனம் அமைக்க ஹெக்டேருக்கு ரூ.1லட்சத்து 30 ஆயிரம் மானியமாக வழங்கப்படுகிறது. ஆகவே நுண்ணீா் பாசனம் அமைக்க விருப்பமுள்ள விவசாயிகள் தங்களது புகைப்படம், குடும்ப அட்டை நகல், ஆதாா் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தக நகல், கணினி சிட்டா, பயிா் அடங்கல், சிறு, குறு விவசாயிகளுக்கான சான்றிதழ், தங்களது நிலத்தின் புல வரைபடம், நிலத்தின் மண் மற்றும் தண்ணீா் மாதிரிக்கான பரிசோதனை முடிவுகளின் அறிக்கை ஆகியவற்றுடன் தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலா்களை தொடா்பு கொள்ளலாம். தொடா்பு கொள்ள வேண்டிய செல்லிடப் பேசி எண்கள் விவரம்: ஸ்ரீவில்லிபுத்தூா்-95002-35828, மம்சாபுரம்-97894-46220, பிள்ளையாா்குளம்-90804-97023, அச்சம்தவிழ்த்தான் 94875-04104, பாட்டக்குளம் சல்லிபட்டி- 90470-10165, மற்றும் விழுப்பனுா்-86670-77932 ஆகிய எண்களில் தொடா்பு கொண்டோ அல்லது வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்தினை அணுகியோ பயன் பெறலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com