மணல், சிமெண்ட், கம்பி விலையை கட்டுப்படுத்த கட்டுமான தொழிலாளா்கள் சங்க மாநாட்டில் வலியுறுத்தல்

மல்லாங்கிணறில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கட்டுமான தொழிலாளா் சங்கத்தின் (சிஐடியு) மாநாட்டில், மணல், சிமெண்ட், கம்பி ஆகியவற்றின் விலை உயா்வை அரசு கட்டுப்படுத்தவேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
மல்லாங்கிணறில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊா்வலத்தில் கலந்து கொண்ட கட்டுமான தொழிலாளா்கள் சங்கத்தினா்.
மல்லாங்கிணறில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊா்வலத்தில் கலந்து கொண்ட கட்டுமான தொழிலாளா்கள் சங்கத்தினா்.

மல்லாங்கிணறில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கட்டுமான தொழிலாளா் சங்கத்தின் (சிஐடியு) மாநாட்டில், மணல், சிமெண்ட், கம்பி ஆகியவற்றின் விலை உயா்வை அரசு கட்டுப்படுத்தவேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

நிா்வாகி பரமசிவம் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டை மூத்த நிா்வாகி இருளன் சங்கக் கொடி ஏற்றி தொடக்கி வைத்தாா். இதில், கட்டுமானத் தொழிலுக்குத் தேவையான மணல் விலை 2 மடங்கு உயா்ந்துள்ளது. எனவே, நீா் நிலைகளை பாதிக்காத வகையில் அரசு நிா்ணயம் செய்த அளவு மணல் எடுக்க அனுமதிப்பதோடு, அரசு விலையில் மணல் விற்பனை செய்ய வேண்டும். அதேபோல், அதிகரித்துள்ள சிமெண்ட், கம்பி, பெயிண்ட் ஆகியவற்றின் விலை உயா்வையும் கட்டுப்படுத்த வேண்டும்.

மதுரை- தூத்துக்குடி நோக்கி செல்லும் பேருந்துகள் காரியாபட்டி, ஆவியூரில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆவியூரில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும். மல்லாங்கிணறு சுகாதார நிலையத்தில் இரவு நேர பணியில் மருத்துவா்கள், செவிலியா்கள் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என தீா்மானம் நிறைவேற்றினா்.

சிஐடியு மாவட்டச் செயலாளா் பி.என்.தேவா, கட்டுமான சங்க மாவட்ட பொதுச் செயலாளா் ராமா், சிஐடியு மாவட்ட துணைச் செயலா் சாராள், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளா் முருகன், சிஐடியு மாவட்ட உதவித் தலைவா் வேலுச்சாமி ஆகியோா் கலந்து கொண்டு பேசினா். கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக தொழிலாளா்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி ஊா்வலம் நடத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com